சொன்னது வேற.. செய்ஞ்சது வேற.. பும்ராவை மதிக்காத பாண்டியா – அணியில் ஏற்படவுள்ள விரிசல்

Bumrah
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக நடைபெற்ற மினி ஏலத்திற்கு முன்பாக சில வீரர்கள் டிரேடிங் முறையில் அணி மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட விடயமாக மாறியது குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹார்டிக் பாண்டியா மும்பை அணிக்காக மாற்றப்பட்டது தான்.

ஏனெனில் மிகப்பெரிய தொகைக்கு குஜராத் அணியில் இருந்து டிரேடிங் செய்யப்பட்ட பாண்டியா நேரடியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அப்படி பாண்டியா கேப்டன் பதவியில் நியமிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு தொடர்ச்சியான சர்ச்சைகள் மும்பை அணியில் நிலவி வருகின்றன.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு வந்தாலும் ஐந்து முறை கோப்பையை வென்ற ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அணியில் உள்ள சக வீரர்களுக்கும் பாண்டியா புதிய கேப்டனாகை நியமிக்கப்பட்டது கபிடிக்காமல் இருந்தது.

மேலும் தொடர்ச்சியாக பாண்டியா மைதானத்தில் முன்னணி வீரர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வது குறித்த வீடியோக்களும் வெளியாகி அவர் மீது சர்ச்சையை அதிகரிக்க வைத்து வருகிறது. ஏற்கனவே பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற போது நிச்சயம் ரோஹித்தின் பரிசீலனை படி தான் நடப்பேன் என்று கூறியிருந்த வேளையில் ரோஹித் சர்மாவை அங்கும் இங்கும் மைதானத்தில் ஓட விட்டு புறக்கணித்ததோடு சேர்த்து முன்னணி வீரர்களையும் தனது இஷ்டத்திற்கு வழி நடத்தி வருகிறார்.

- Advertisement -

அதே வேளையில் இந்த தொடரானது ஆரம்பிப்பதற்கு முன்னதாக பந்துவீச்சு யூனிட்டை பும்ரா தான் தலைமை தாங்குவார் என்று கூறியிருந்த வேளையில் தற்போது பும்ராவையும் பாண்டியா புறக்கணித்து வருகிறார். ஏனெனில் வழக்கமாக மும்பை அணியில் கடந்த பல வருடங்களாக முன்னணி பந்துவீச்சாளராக விளங்கி வரும் பும்ரா துவக்க ஓவர்கள் மற்றும் இறுதி ஓவர்களில் பந்துவீசுவார்.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு என்ன செய்யணும்ன்னு அவங்களுக்கு தெரியும்.. நீங்க சொல்லாதீங்க.. விராட் கோலி மீது உத்தப்பா அதிருப்தி

ஆனால் அவரது இயல்பை தற்போது மாற்றியுள்ள பாண்டியா துவக்க ஓவர்களில் பயன்படுத்தாமல் இடையிடையே அவரை பயன்படுத்தியது மட்டும் இன்றி தேவையின்றி அவரின் இடத்தை மாற்றி மாற்றி செயல்பட வைத்துள்ளார். இதன் காரணமாக இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பும்ரா மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி பும்ராவின் இடத்தில் பாண்டியா மாற்றி உள்ளதால் நேரடியாகவே பாண்டியாவின் மீது பும்ரா அதிருப்தியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நிச்சயம் பும்ரா பாண்டியா இடையே விரிசல் விழலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement