- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஹார்டிக் பாண்டியாவின் மனைவி அவரை விட்டு பிரிய மும்பை இந்தியன்ஸ் அணிதான் காரணமா? – என்ன நடந்தது?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா அவரது மனைவி நட்டாஷா ஸ்டான்கோவிக்கை விவாகரத்து செய்ய உள்ளதாக சமூக வலைதளத்தில் அதிகளவு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதோடு விவாகரத்துக்கு பிறகு ஹார்டிக் பாண்டியாவின் 70 சதவீத சொத்துக்கள் அவரது மனைவியான நடாஷாவிற்கு செல்லும் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த ஆண்டு இறுதி வரை இருவருமே ஒன்றாகவே இணைந்திருந்த வேளையில் கடந்த மூன்று மாதங்களாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதோடு சமூக வலைதளத்திலும் பாண்டியாவுடன் இருந்த புகைப்படங்களை நீக்கிய நட்டாஷா மும்பை அணி விளையாடும் போட்டிகளையும் நேரில் வந்து ஆதரவை தெரிவிக்காமல் இருந்து விட்டார். இந்நிலையில் பாண்டியா மற்றும் அவரது மனைவி ஆகியோரது இந்த விரிசலுக்கு காரணம் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் தான் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் குஜராத் அணியிடம் இருந்து டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். காயம் காரணமாக பெரும்பாலான நேரங்களில் விளையாடாமல் இருக்கும் பாண்டியா மீண்டும் ஐபிஎல் தொடருக்கு நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே தீவிர பயிற்சினை மேற்கொண்டார்.

- Advertisement -

அதன் காரணமாக அவரால் குடும்பத்துடன் இருக்க முடியவில்லை. அந்தக் கட்டத்தில் தான் நடாஷா அவரை விடுத்து பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக நேரம் செலவழித்ததால் தான் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது என்று சிலர் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க : 2012 மாதிரி இருக்கு.. சிறந்த பிறந்தநாள் பரிசு.. அவரோட சப்போர்ட் தான் எல்லாத்துக்கும் காரணம்.. சுனில் நரேன்

இது எப்படி இருப்பினும் இந்த விவகாரம் குறித்து ஹார்டிக் பாண்டியா தெளிவுபடுத்தினால் மட்டுமே உண்மை என்ன? என்பது தெரியவரும். எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணைக்கேப்டனாக பாண்டியா செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -