ஆடுனது 1 மேட்ச். அடிச்சது 1 ரன். ஆனாலும் 8.25 கோடிக்கு ஏலம் போகி – பிரமிக்க வைத்த வீரர்

MI-Auction
- Advertisement -

இந்தியாவில் வரும் மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ள பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது நேற்று பெங்களூருவில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஏலத்தின் முடிவில் பல வீரர்கள் ஆச்சரியப்படும் அளவிலான தொகைக்கு வாங்கப்பட்ட நிலையில் இன்று இரண்டாம் நாளில் ஏலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 590 வீரர்கள் இறுதி செய்யப்பட்ட பட்டியலைக் கொண்டு நடைபெற்று வரும் இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு தேர்வு செய்து வருகின்றனர்.

hugh

- Advertisement -

அந்த வகையில் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் பெரிய தொகைக்கு போன வேளையில், எதிர்பார்க்காத சில வீரர்களும் பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. மேலும் இந்த ஐபிஎல் ஏலத்தில் மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெரிய அணிகள் எடுக்கும் வீரர்களை ரசிகர்கள் பெருமளவில் கவனித்து வருகின்றனர்.

அந்த வகையில் மும்பை அணி சிறப்பான பல வீரர்களை தங்கள் அணியில் தேர்வு செய்துள்ளது. அதிலும் மும்பை அணி இன்று தேர்வு செய்த ஒரு வீரர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். அதன்படி இதுவரை ஒரே ஒரு ஐ.பி.எல் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள ஒருவர் அதுவும் ஒரே ரன் மட்டுமே அடித்த வீரரை மும்பை அணி 8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

Tim-David

அதன்படி 25 வயதான சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் டி20 கிரிக்கெட்டில் தனது அதிரடியான ஆட்டத்தால் உலகெங்கிலும் பல ரசிகர்களைக் கொண்டவர். அவரைத்தான் மும்பை அணி தற்போது இந்த பெரிய தொகைக்கு ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் அவர் கடந்த ஆண்டு ஆர்சிபி அணிக்காக ஒரே போட்டியில் விளையாடி இருந்தாலும் அவரது திறமையும் அளப்பரியது.

- Advertisement -

அவர் உலககெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக்குகளில் கலந்து கொண்டு அசத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ், பங்களாதேஷ் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என அனைத்து விதமான டி20 லீக்களிலும் கலந்துகொண்டு தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எளிதாக சிக்ஸ் அடிக்கும் திறமையை கொண்ட அவர் மிகப்பிரமாண்டமான ஷாட்டுகளை விளையாடக்கூடிய மிகப் பெரிய ஹிட்டர் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

இதையும் படிங்க : தமிழ் பெண்ணை மணக்கும் நட்சத்திர ஆஸி வீரர் மேக்ஸ்வெல் – கல்யாண பத்திரிக்கையை நீங்களே பாருங்க

ஏற்கனவே மும்பை அணியின் பின்வரிசையில் பொல்லார்டு இருக்கும் வேளையில் தற்போது டிம் டேவிட்டையும் மும்பை அணி வாங்கியுள்ளது அந்த அணியை பலப்படுத்தியுள்ளது. பவர் ஹிட்டரான இவர் பகுதிநேர பந்துவீச்சாளராகவும் செயல்படும் திறன் கொண்டவர் என்பதால் நிச்சயம் இந்த தேர்வு மும்பை அணிக்கு சிறப்பான ஒன்றாகவே இருப்பதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement