தமிழ் பெண்ணை மணக்கும் நட்சத்திர ஆஸி வீரர் மேக்ஸ்வெல் – கல்யாண பத்திரிக்கையை நீங்களே பாருங்க

Maxwell
- Advertisement -

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் களத்தில் பந்து வீச்சாளர்களை பந்தாடி சிக்ஸர்களை பறக்க விடுவதில் தனித் திறமையைப் பெற்றுள்ளார். இதன் காரணமாக இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து விளையாடி வரும் இவர் கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார்.

glenn-maxwell

- Advertisement -

அதற்கு முந்தைய சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் ஒரு சிக்சர் கூட அடிக்க முடியாமல் படுமோசமான பார்மில் இருந்தார். இருப்பினும் அவரை கடந்த வருடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் நம்பி வாங்க அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாய் செயல்பட்ட மேக்ஸ்வெல் பார்ம்க்கு திரும்பி அதிரடியாக விளையாடி பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முக்கிய பங்காற்றினார்.

நட்சத்திரம் மேக்ஸ்வெல்:
அதன்பின் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021 தொடரிலும் அதிரடியாக செயல்பட்ட அவர் வரலாற்றிலேயே முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் காரணமாக ஐபிஎல் 2022 தொடரில் மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட அவர் ரூபாய் 11 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

maxwell

கடந்த பல வருடங்களாக இந்தியாவில் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் அவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது. அவருக்கும் இந்தியாவையும் இந்தியாவின் கலாச்சாரத்தையும் மிகவும் பிடித்துப் போனது. அதன் காரணமாக இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை நீண்ட காலமாக மணக்க விரும்பிய அவர் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற மெல்போர்ன் நகரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த “வினி ராமன்” என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

- Advertisement -

தமிழ் பெண்:
அதை பெற்றோரிடமும் தெரிவித்த அவர் கடந்த வருடம் அவரை திருமணம் செய்வதற்காக நிச்சயம் செய்து கொண்டார். ஆனால் கடந்த வருடம் கரோனா காரணமாக இவர்களின் திருமணம் ஒரு வருடம் தள்ளி வைக்கப்பட்டது. இதில் ஆச்சரியம் என்னவெனில் இந்த “வினி ராமன்” என்பவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். சென்னையில் உள்ள மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த அவரின் குடும்பம் கடந்த பல வருடங்களுக்கு முன்பே ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.

Maxwell

இந்நிலையில் கிளென் மேக்ஸ்வெல் – வினி ராமன் ஆகியோரின் திருமணம் தற்போது நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்காக அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி மஞ்சள் நிற வண்ணத்தில் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பத்திரிக்கையை அழைப்பிதழாக அச்சிடுள்ளார்கள். இந்த அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருமணம் எப்போது:
அந்த அழைப்பிதழின் படி கிளென் மேக்ஸ்வெல் – வினி ராமன் திருமணம் வரும் 27/3/2022 (பங்குனி 13ஆம் தேதி) அன்று ஆஸ்திரேலிய நேரப்படி காலை 11.35 மணிக்கு மேல் 12.35 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்த திருமணம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இருக்கும் பிளாக்பார்ன் ரோட், புர்வுட் ஈஸ்ட் இடத்தில் இருக்கும் வோக் பால் ரூம் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

Glenn Maxwell Marriage

ஆஸ்திரேலியாவை ஒரு கிரிக்கெட் வீரர் இந்திய வம்சாவளியை அதிலும் தமிழக வம்சத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணப்பது தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பெருமையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இந்த திருமண அழைப்பிதழ் தமிழில் அச்சடிக்கப்பட்டது தமிழுக்கும் தமிழருக்கும் உலக அளவில் ஒரு பெருமை சேர்த்துள்ளதால் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

Advertisement