வேண்டா வெறுப்பாக தேர்வு செய்யப்பட்ட சச்சினின் மகன் – மெகா ஏலத்தின் போது ஏற்பட்ட அவமானம்

Arjun-Tendulkar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற உள்ள பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தில் 590 வீரர்கள் இறுதிப்படுத்தப்பட்டு அந்த வீரர்களை கொண்டு ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் பல வீரர்களின் தேர்வு ஆச்சரியப்படும் வகையில் அமைந்தது.

mi

- Advertisement -

அந்த வகையில் சாம்பியன் அணிகளான சென்னை மற்றும் மும்பை அணிகள் எடுக்கும் வீரர்களை ரசிகர்கள் உற்று நோக்கி வந்தனர். ஏனெனில் மும்பை மற்றும் சென்னை அணிகளை எப்போதும் மற்ற அணிகளுக்கு கடும் போட்டி தரும் அணிகளாகும் அதிக முறை கோப்பையை கைப்பற்றிய அணியாகவும் இருப்பதால் அந்த அணிகளில் தேர்வாகும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

மும்பை அணி இந்த ஏலத்தில் ஏகப்பட்ட வீரர்களை அசத்தலான தொகைக்கு எடுத்திருந்தாலும் சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தேர்வு செய்யும்போது ஏற்பட்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி 20 லட்சம் என்கிற அடிப்படை விலைக்கு தனது பெயரை பதிவு செய்திருந்த அர்ஜுன் டெண்டுல்கரை 30 லட்சத்திற்கு மும்பை அணி ஏலத்தில் எடுத்தது.

Arjun

ஆக்சனில் அர்ஜுன் டெண்டுல்கர் பெயர் வந்தபோது ஏலதாரர் எட்மேட்ஸ் மும்பை அணி நீங்கள் தயாரா? என்று கேட்டதும் மற்ற அங்கிருந்த அணிகளின் மத்தியில் சிரிப்பலை ஏற்பட்டது. மேலும் யாருமே எதிர்பாராத விதமாக மும்பை அணிக்கு போட்டியாக குஜராத் அணி அர்ஜுன் டெண்டுல்கரை 25 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் கேட்டது.

- Advertisement -

இதனை சற்றும் எதிர்பாராத மும்பை அணி உரிமையாளர் ஆகாஷ் அம்பானி சிரித்தபடியே அவரை விட்டுக் கொடுக்க கூடாது என்பதற்காக முப்பது லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தார். மும்பை அணியின் முன்னாள் கேப்டனான சச்சினின் மகனான இவரை தேர்வு செய்யாமல் விட்டால் அது தவறாகி விடும் என்ற ஒரே காரணத்திற்காக வேண்டா விருப்பாக அவரை 30 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.

இதையும் படிங்க : என்னது வேண்டுமென்றே சுரேஷ் ரெய்னாவை ஒதுக்கியதா சி.எஸ்.கே – மெகா ஏலத்தில் இதை கவனிச்சீங்களா?

சச்சினின் பெயரால் மட்டுமே அவர் தேர்வு செய்யப்பட்டு வருகிறார் என்று கூறப்படும் வேளையில் அந்த நிழலில் இருந்து வெளியே வரவேண்டும் என்று அர்ஜுன் கடினமாக உழைத்து வருகிறார். இருப்பினும் அவருக்கு மும்பை அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டால் அது சந்தேகம்தான். ஏனெனில் கடந்த சீசனில் மும்பை அணிக்காக இடம்பெற்ற அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement