- Advertisement -
ஐ.பி.எல்

விக்னேஷ் புத்தூரை ஏன் சேக்கல? தப்பு நடந்ததே இந்த இடத்தில் தான் – தோல்விக்கு பின் ரசிகர்கள் கொந்தளிப்பு

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்டு வரும் வேளையில் கடந்த சில ஆண்டுகளாகவே அவர்கள் மிகப்பெரிய அளவில் தடுமாறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறிய வேளையில் இந்த ஆண்டு மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் பல்வேறு மாற்றங்களை செய்திருந்தது.

மும்பை அணி இப்படி மோசமாக தோக்க இதுதான் காரணம் : கொந்தளித்த ரசிகர்கள்

ஆனாலும் நடைபெற்று வரும் 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் விளையாடிய மும்பை அணி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்து தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது. அதனை தொடர்ந்து நேற்று குஜராத் அணிக்கு எதிராக நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும் 36 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியிடம் தோல்வியை சந்தித்து தற்போது இந்த தொடரின் ஆரம்பத்திலேயே இரண்டு தோல்விகளை பெற்று மாபெரும் சரிவை சந்தித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்ததற்கு காரணமே அணித்தேர்வில் உள்ள குளறுபடிகள் தான் என மும்பை அணியின் ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக பந்து வீசிய இளம் சுழற்பந்து வீச்சாளரான விக்னேஷ் புத்தூர் 32 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆனால் அவருக்கு நேற்றைய போட்டியில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்காமல் அவருக்கு பதிலாக முஜிபுர் ரஹ்மானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் நேற்றைய போட்டியில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முஜிபுர் ரஹ்மான் 2 ஓவர்களை வீசி 28 ரன்கள் விட்டுக் கொடுத்து மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதேபோன்று மற்றொரு வேகப்பந்து பேச்சாளரான சத்திய நாராயண ராஜு 3 ஓவர்கள் பந்துவீசி 40 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இப்படி மோசமாக பந்துவீசும் பவுலர்களை பிளேயிங் லெவனில் எடுத்துவிட்டு சிறப்பாக வீசிய விக்னேஷ் புத்தூரை ஏன் பென்ச் செய்தார்கள்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் ஆர்சிபி அணி ஏலத்தில் தவறவிட்ட இங்கிலாந்து அணியின் அதிரடி வீரரான வில் ஜாக்ஸை அணியில் தேர்வு செய்து விட்டு அவருக்கு முதல் போட்டியில் மட்டுமே மும்பை அணி வாய்ப்பு வழங்கி இருந்தது. நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் முஜிபுர் ரஹ்மானை வெளியேற்றிவிட்டு இம்பேக்ட் வீரராக வில் ஜேக்ஸை கொண்டு வந்திருக்கலாம். ஆனால் வில் ஜாக்ஸ்க்கு பதிலாக ராபின் மின்சை மும்பை இந்தியன்ஸ் அணி இம்பேக்ட் வீரராக களமிறக்கி தவறு செய்துவிட்டது.

இதையும் படிங்க : கிரிஸ் கெயிலுக்கு அடுத்து ஐ.பி.எல் தொடரில் அசத்தலான சாதனையை நிகழ்த்திய சுப்மன் கில் – விவரம் இதோ

ஏனெனில் அனுபவமற்ற ராபின் மின்ஸ் நேற்றைய போட்டியில் 6 பந்துகளை சந்தித்து 3 ரன்கள் மட்டுமே குவித்தார். ஒருவேளை அவருக்கு பதிலாக வில் ஜாக்ஸ் இம்பேக்ட் வீரராக இறங்கி இருந்தால் நிச்சயம் 197 ரன்கள் என்கிற பெரிய இலக்கினை துரத்தும் போது அவரது அதிரடி ஆட்டம் மும்பை அணிக்கு கை கொடுத்திருக்கும். இப்படி மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் செய்த குளறுபடியான தேர்வுகளே தோல்விக்கு காரணம் என அந்த அணியின் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -