குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய இன்னிங்சில் 27 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 38 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் அடித்த இந்த 38 ரன்கள் மூலம் ஐபிஎல் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் சுப்மன் கில் நிகழ்த்திய அசத்தல் சாதனை :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற குஜராத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த குஜராத் அணியானது 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட :
20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியால் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் குஜராத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது சுப்மன் கில் ஐ.பி.எல் போட்டிகளில் கிறிஸ் கெயிலுக்கு அடுத்து மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதாவது நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் அவர் அடித்த 38 ரன்களையும் சேர்த்து இதுவரை நரேந்திர மோடி மைதானத்தில் மட்டும் 20 இன்னிங்ஸ்களில் விளையாடி 1024 ஐ.பி.எல் ரன்களை குவித்துள்ளார்.
இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் குறைந்த போட்டிகளில் விளையாடி 1000 ஐ.பி.எல் ரன்களை அடித்த இந்திய வீரராக அவர் சாதனையை நிகழ்த்தியுள்ளார். முன்னதாக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரரான கிறிஸ் கெயில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 19 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை அடித்து முதலிடத்தில் இருந்தார்.
இதையும் படிங்க : ரஷீத் கானுக்கே இப்படி ஒரு நிலைமையா? நட்சத்திர வீரருக்கு முதல் முறையாக நேர்ந்த சோகம் – விவரம் இதோ
இவ்வேளையில் அவருக்கு அடுத்து தற்போது சுப்மன் கில் 20 இன்னிங்ஸ்களில் நரேந்திர மோடி மைதானத்தில் 1000 ரன்களை குவித்து இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளார். அதற்கு அடுத்த இடங்களில் டேவிட் வார்னர் (22 இன்னிங்ஸ்) மற்றும் ஷான் மார்ஷ் (26 இன்னிங்ஸ்) ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.



