5 கப் வாங்கி கொடுத்ததால சும்மா விடுறோம்! ரோஹித் மீது அலுத்துக்கொள்ளும் மும்பை ரசிகர்கள் – விவரம் இதோ

MI V DC IPL 2022
- Advertisement -

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 6-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பையை தோற்கடித்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 161/4 ரன்களை எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள சூர்யகுமார் யாதவ் அட்டகாசமாக பேட்டிங் செய்து வெறும் 36 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார்.

MI vs KKR

- Advertisement -

பட் கமின்ஸ் மேஜிக்:
அதை தொடர்ந்து 162 என்ற இலக்கை துரத்திய கொல்கத்தா வெறும் 16 ஓவரிலேயே 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 162 ரன்களைக் குவித்து அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் அஜிங்கிய ரஹானே 7, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 10, சாம் பில்லிங்ஸ் 17 (12), நிதிஷ் ராணா 8 (7) என முக்கிய வீரர்கள் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் 11 (5) அவுட்டாகி மேலும் அதிர்ச்சி அளித்தார்.

இதனால் 101/5 என தடுமாறிய அந்த அணியின் வெற்றிக்கு கேள்விக்குறியான நிலையில் மறுபுறம் தொடர்ந்து விளையாடி வந்த வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட 50* விளாசினார். அவருடன் கடைசி நேரத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் யாருமே எதிர்பாராத வண்ணம் வெறும் 15 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 6 இமாலய சிக்சர்களை பறக்கவிட்டு 56* ரன்களை குவித்து கொல்கத்தாவை தனி ஒருவனாக வெற்றி பெறச் செய்தார். அதிலும் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் டேனியல் சாம்ஸ் வீசிய 16-வது ஓவரில் 35 ரன்களை தெறிக்கவிட்ட அவர் 14 பந்துகளில் சதமடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற கேஎல் ராகுல் சாதனையை சமன் செய்தார்.

Mumbai Indians MI

மும்பை ஹாட்ரிக் தோல்வி, ரோஹித் சொதப்பல்:
இந்த படுமோசமான தோல்வியால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வி அடைந்துள்ள மும்பை அணி ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்த பரிதாபத்திற்கு உள்ளாகியது. 5 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக திகழும் அந்த அணி இந்த ஹாட்ரிக் தோல்வியால் தற்போது புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் தள்ளாடுவது அந்த அணி ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

- Advertisement -

அந்த அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியவை காரணங்களாக அமைந்து வருகிறது. அதிலும் பேட்டிங் துறையில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து சொதப்புவது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்து வருகிறது. குறிப்பாக கொல்கத்தாவுக்கு எதிரான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பைக்கு தொடக்க வீரராக களமிறங்கிய அவர் டெஸ்ட் போட்டியை போல 12 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

Rohit

அலுத்துக்கொள்ளும் ரசிகர்கள்:
அவருடன் களமிறங்கிய மற்றொரு இளம் தொடக்க வீரர் இஷான் கிசனும் 21 பந்துகளில் 14 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இப்படி அதிரடியாக விளையாட வேண்டிய இந்த ஜோடி ஆரம்பத்திலேயே நிறைய பந்துகளை எடுத்து குறைந்த ரன்கள் எடுத்ததால் 11 ஓவர்களில் 55/3 என மும்பை திண்டாட்டமான தொடக்கத்தை பெற்றது. அதன் காரணமாக அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 52 (38), திலக் வர்மா 38* (27), பொல்லார்ட் 22* (5) ஆகியோர் அதிரடியாக விளையாடி முழுமூச்சுடன் போராடிய போதிலும் மும்பைக்கு பெரிய ஸ்கோரை பெற்றுத்தர முடியவில்லை.

- Advertisement -

இதில் இசான் கிசான் கூட கடந்த 2 போட்டிகளில் அரை சதம் அடித்து அசத்தினார். ஆனால் அந்த அணி பெரிதும் நம்பியிருக்கும் ரோகித் சர்மா இந்த வருடம் பங்கேற்ற 3 போட்டிகளிலும் இதுவரை பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை. கடைசியாக அவர் களமிறங்கிய 7 இன்னிங்ஸ்களில் முறையே 3, 10, 41, 18, 22, 7, 8 என சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதைவிட கடந்த 2017 முதல் 1791 ரன்களை 11 அரை சதங்கள் உட்பட 26.33 என்ற சுமாரான சராசரியில் 126.93 என்ற ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடிய ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் அவர் எடுத்துள்ளார்.

Rohit Sharma Rishabh Pant

இதே 2017 – 2022* வரையிலான காலகட்டத்தில் அவரை போலவே 1200+ பந்துகளை சந்தித்த 19 பேட்ஸ்மேன்களை விட குறைவான பேட்டிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தை ரோகித் சர்மா கொண்டுள்ளார். அதாவது கடந்த 2017 முதல் ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் மும்பை அணிக்காக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என்ற வரலாற்றுச் சாதனை படைத்துள்ள காரணத்தால் அவரின் இந்த சுமாரான பேட்டிங் பெரும்பாலும் கண்டு கொள்ளப்படுவதில்லை.

இதையும் படிங்க : அவங்களுக்கு என்னப்பா காசு இருக்கு, கடைசி நேரத்தில் உள்ள வந்துருவாங்க! மும்பை பற்றி முன்னாள் பாக் வீரர்

எனவே பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டாலும் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே காரணத்தால் உங்களை சும்மா விடுகிறோம் என சென்னை 28 படத்தில் பிரேம்ஜி கூறுவது போன்ற ஸ்டைலில் ரோகித் சர்மா மீது மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் அலுத்துக் கொள்ளும் வகையில் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

Advertisement