அவங்களுக்கு என்னப்பா காசு இருக்கு, கடைசி நேரத்தில் உள்ள வந்துருவாங்க! மும்பை பற்றி முன்னாள் பாக் வீரர்

Mi
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக துவங்கி வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்து பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று துவங்கிய இந்த தொடரில் தற்போது நடைபெற்று வரும் லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற அனைத்து அணிகளும் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. அந்த வகையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள மும்பை இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்துள்ளது.

MI vs DC IPL 2022

- Advertisement -

திணறும் மும்பை:
இந்த வருடம் டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக தனது முதல் 2 போட்டிகளில் விளையாடிய மும்பை அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து இந்த வருடம் ஐபிஎல் தொடரை தோல்வியுடன் துவக்கியது. அதைத்தொடர்ந்து கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று நடந்த 3-வது போட்டியிலும் மண்ணை கவ்விய அந்த அணி ஹாட்ரிக் தோல்வியை பெற்று புள்ளிப் பட்டியலில் தற்போது 9-வது இடத்தில் பாதாளத்தில் தவித்து வருகிறது.

கடந்த வருடம் வரை எதிர் அணிகளை மிரட்டும் அணியாக வலம் வந்த மும்பை சமீபத்தில் நடந்த ஏலத்தின் போது ஹர்டிக் பாண்டியா, ட்ரெண்ட் போல்ட் போன்ற ஒரு சில முக்கிய வீரர்களை இழந்தது. இருப்பினும் அதற்கு ஈடாக வேறு ஒருசில நல்ல வீரர்களை வாங்கிய போதிலும் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பிய அந்த அணி இந்த தொடர் தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து எப்படி கோப்பையை வாங்கப் போகிறது என்ற கவலை மும்பை ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

MI vs KKR Pat CUmmins Venkatesh Iyer

மும்பை மீண்டு வரும்:
இந்நிலையில் இந்த தொடர் தோல்விகளில் இருந்து மும்பை மீண்டு வரும் என முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மும்பை எப்போதும் ஐபிஎல் தொடரின் கடைசி நேரத்தில் அதிசயங்களை நிகழ்த்தும் ஒரு அணியாக இருந்து வருகிறது. எனவே அவர்களைப் பற்றி இப்போது கூறுவதற்கு எதுவும் இல்லை. வெற்றிப் பாதைக்கு திரும்ப அவர்களுக்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது.

- Advertisement -

இதற்கு முன் ஒருசில ஐபிஎல் தொடர்களில் இதேபோல் தடுமாறி அவர்களின் கதை முடிந்தது என நினைத்த வேளையில் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வென்றுள்ளனர். அவர்களிடம் நிறைய பணம் உள்ளது. எனவே அதை நிரூபிக்க இந்த தொடரின் இறுதிக்குள் ஏதாவது செய்வார்கள் என நினைக்கிறேன்”

Akhtar

“மும்பை அணியின் நிர்வாகம் எப்போதும் விஸ்வாசம் நிறைந்தது. எனவே ஒரு முறை அவர்கள் உங்களை நம்பி வாங்கி விட்டால் நீங்கள் மிகப்பெரிய ஆபத்தில் விழாமல் இருக்கும்வரை உங்கள் மீது அவர்கள் நிறைய பணத்தை முதலீடு செய்வார்கள். ஒரு அணி நிர்வாகம் இதுபோல செய்வது நல்லதாகும். அதற்கு ஏற்றார் போல் அந்த அணியில் விளையாடும் வீரர்களும் விசுவாசமாக நடந்து கொண்டு இந்தியாவுக்காக விளையாடும் அளவுக்கு முன்னேறுகின்றனர்” என கூறினார்.

- Advertisement -

பொதுவாகவே ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி என்றால் ஆரம்பத்தில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தாலும் அதன் பின் அதிலிருந்து மீண்டெழுந்து கோப்பையை வென்று காட்டிய அணியாக தன்னை ஏற்கனவே நிரூபித்துள்ளது. அதிலும் 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் இதேபோல ஆரம்பத்தில் தடுமாறினாலும் அதன்பின் மீண்டெழுந்த மும்பை கோப்பைகளை வென்று சாதித்தது.

Mumbai Indians MI

எனவே அதே போல இந்த வருடமும் அந்த அணி தோல்வியில் இருந்து மீண்டு வரும் என சோயப் அக்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இந்த வருடம் அந்த அணி நிர்வாகம் ஒருசில வீரர்கள் மீது நிறைய பணத்தை செலவழித்துள்ளதாக கூறும் சோயப் அக்தர் அந்த வீரர்கள் கண்டிப்பாக இந்த தொடர் முடிவதற்குள் அந்த பணத்திற்கு விஸ்வாசமாக சிறப்பாக செயல்பட்டு ஏதேனும் மேஜிக் நிகழ்த்தி மும்பையை பிளே-ஆப் சுற்றுக்கு கொண்டு வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : அண்ணன் தம்பிக்குள்ள இதெல்லாம் சகஜம்! அன்று சண்டை போட்டு இன்று பாசமழை பொழியும் இந்திய வீரர்கள்

எடுத்துக்காட்டாக இதர ஐபிஎல் அணிகளை காட்டிலும் இஷான் கிசான் போன்ற இளம் வீரருக்கு 15.25 கோடி என்ற மிகப்பெரிய தொகையை மும்பை அணி நிர்வாகம் வாரி இறைத்துள்ளதை சோயப் அக்தர் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது அவர்கள் போட்ட பணம் கண்டிப்பாக வீண் போகாமல் இந்த ஐபிஎல் தொடர் முடிவதற்குள் இஷான் கிசான் போன்ற வீரர்களின் சிறப்பான செயல்பாடுகளின் வாயிலாக மேஜிக் நிகழ்த்தி மும்பையை பிளே ஆப் சுற்றுக்குள் அழைத்து வந்துவிடும் என சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

Advertisement