IPL 2023 : அந்த கேட்ச் மட்டும் பிடிச்சிருந்தா – பிளேயிங் லெவனில் உலக சாதனை படைத்தும் பரிதாபமாக தோற்ற மும்பை

Ishan Kishan
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 28இல் மாபெரும் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் ஆகிய அணிகள் கோப்பைக்காக மோதும் நிலையில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள மும்பை 6வது கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டு வெளியேறியது. கடந்த வருடம் புள்ளி பட்டியலில் முதல் முறையாக கடைசி இடத்தை பிடித்த அந்த அணி இம்முறையும் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியது.

அதனால் லீக் சுற்றுடன் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி லீக் சுற்றின் 2வது பகுதியில் கடப்பாரை பேட்டிங்கை பயன்படுத்தி அதிரடியாக செயல்பட்டு4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அத்துடன் எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை தோற்கடித்த அந்த அணி ஃபைனலுக்குச் சென்று பரம எதிரியான சென்னையை தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குஜராத்துக்கு எதிரான குவாலிபயர் 2 போட்டியில் 62 ரன்களை வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது.

- Advertisement -

உலக சாதனையும் வேதனையும்:
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத்துக்கு சுமாராக பந்து வீசிய மும்பை பவுலர்களை அடித்து நொறுக்கிய சுப்மன் கில் 7 பவுண்டரி 10 சிக்ஸருடன் இந்த சீசனில் 3வது சதத்தை விளாசி 129 (60) ரன்கள் அடித்து 20 ஓவரில் 233/3 ரன்களை குவிக்க உதவினார். அதை துரத்திய மும்பை அதிரடியாக விளையாடினாலும் பதற்றமாக பேட்டிங் செய்து 18.2 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா 8, நேஹல் வதேரா 4, டிம் டேவிட் 2 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் சூரியகுமார் யாதவ் 61 (38) திலக் வர்மா 43 (14) என நம்பிக்கை நட்சத்திரங்கள் அதிரடியான ரன்களை குவித்தும் வெற்றி காண முடியவில்லை.

முன்னதாக அப்போட்டியில் மும்பையின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட இஷான் கிசான் மீது முதல் இன்னிங்ஸின் கடைசி கட்ட சமயங்களில் ஓவர் மாற்றும் இடைவெளியில் கிறிஸ் ஜோர்டான் எதிர்பாராத விதமாக மோதினார். குறிப்பாக கிறிஸ் ஜோர்டான் எல்போ பகுதி கண்கள் பகுதியில் பட்டதால் காயத்தை சந்தித்த இசான் கிசான் மேற்கொண்டு விளையாட முடியாமல் பெவிலியன் திருப்பினார்.

- Advertisement -

அதே காரணத்தால் 234 ரன்களை துரத்தும் போது அவர் பேட்டிங் செய்ய களமிறங்காதது மும்பைக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. அந்த நிலையில் அவர் விளையாடிய ஓப்பனிங் இடத்தில் நேஹல் வதேரா இம்பேக்ட் வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்கியும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் அவுட்டாகி சென்றார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் அவுட்டானதால் கிட்டத்தட்ட பறிபோன வெற்றியை பிடிப்பதற்காக எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை பயன்படுத்த நினைத்த மும்பை நிர்வாகம் சாதூரியமாக செயல்பட்டு இசான் கிசான் காயத்தை நடுவரிடம் சுட்டிக்காட்டி அவருக்கு பதிலாக விஷ்ணு வினோத்தை “சப்ஸ்டியூட் வீரராக” களமிறக்கியது.

அதாவது போட்டியில் தலைப்பகுதியில் காயத்தை சந்திக்கும் வீரருக்கு பதிலாக நடுவரின் அனுமதியுடன் வேறொரு வீரர் களமிறங்கி பேட்டிங், பவுலிங் போன்ற அனைத்து வேலைகளையும் செய்யலாம் என்ற விதிமுறை ஏற்கனவே சர்வதேச அளவில் கொண்டுவரப்பட்டு தற்போது ஐபிஎல் தொடரிலும் நடைமுறையில் உள்ளது. அதை சரியாக பயன்படுத்திய மும்பை “உலகிலேயே ஒரு டி20 போட்டியில் முதல் முறையாக நேஹல் வதேரா, விஸ்ணு வினோத் என 2 எக்ஸ்ட்ரா வீரர்களையும் சேர்த்து 13 வீரர்களுடன் விளையாடிய முதல் அணி” என்ற உலக சாதனை படைத்தது.

இதையும் படிங்க:GT vs MI : டீம் சிக்கலான பொசிஷன்ல இருந்தா நான் இவரைத்தான் கண்ண மூடிட்டு கூப்பிடுவேன் – பாண்டியா பாராட்டு

ஆனால் ஆரம்பத்திலேயே கிறிஸ் ஜோர்டான் வீசிய 6வது ஓவரின் 5வது பந்தில் வெறும் 30 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை டைவ் அடித்து தாவி பிடிக்க முயற்சித்த டிம் டேவிட் தவற விட்டதை பயன்படுத்திய சுப்மன் கில் 129 ரன்களை விளாசி தோல்வியை பரிசளித்தார். அந்த வகையில் 13 வீரர்களுடன் களமிறங்கியும் அந்த கேட்ச்சை பிடித்திருந்தால் இந்நேரம் ஃபைனலுக்கு சென்றிருப்போம் என மும்பை ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement