GT vs MI : டீம் சிக்கலான பொசிஷன்ல இருந்தா நான் இவரைத்தான் கண்ண மூடிட்டு கூப்பிடுவேன் – பாண்டியா பாராட்டு

Hardik-Pandya
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் துவங்கிய 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு சென்னை மற்றும் குஜராத் அணிகள் தகுதிபெற்றுள்ளன. குஜராத் அணிக்கெதிராக நடைபெற்ற முதலாவது குவாலிபயர் போட்டியில் வெற்றிபெற்ற சி.எஸ்.கே அணி ஏற்கனவே நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய குஜராத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

- Advertisement -

அதன்படி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த இரண்டாவது குவாலிபயர் போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணியானது 233 ரன்களை குவித்தது. பின்னர் 234 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது 171 ரன்களை மட்டுமே குவித்ததால் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் முதல்முறையாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தங்களது ஆதிக்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் குஜராத் அணி இரண்டாவது ஆண்டிலும் கோப்பையை வெல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளது.

Rashid Khan

இந்நிலையில் நேற்றைய இரண்டாவது குவாலிபயர் போட்டியில் பெற்ற வெற்றிக்கு பின்னர் பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி குஜராத் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அந்தவகையில் ரஷீத் கான் குறித்து பாண்டியா கூறியதாவது : ஏற்கனவே ரஷீத் கானின் திறமை குறித்து போதுமான அளவு பேசிவிட்டேன். அவரை பாராட்ட வார்த்தைகளே பத்தாது. எங்களது அணி எப்போது சிக்கலை சந்தித்தாலும் நான் நேரடியாக முதல் நபராக ரஷீத் கானை அழைப்பேன். அவரும் களத்தில் தனது 100 % திறனை வெளிப்படுத்தி போட்டியை எங்களுக்கு சாதகமாக மாற்றுவார் என பாண்டியா பாராட்டினார்.

இதையும் படிங்க : IPL 2023 : உண்மையாவே இவர் அடுத்த ரெய்னா தான், சின்ன தல’யின் மிரட்டல் சாதனையை சமன் செய்த மும்பை வீரர் – ரசிகர்கள் பாராட்டு

நேற்றைய இரண்டாவது குவாலிபயர் போட்டியில் கடைசி ஓவரின் போது விஜய் ஷங்கர், மில்லர், திவாட்டியா இருந்தும் அவர்களுக்கு முன்னதாக கேப்டன் பாண்டியா, ரஷீத் கானை தான் பேட்டிங் செய்ய அழைத்தார். அதேபோன்று பந்துவீச்சில் 4 ஓவர்களை வீசிய அவர் 33 ரன்களை விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement