பெங்களூரு, டெல்லி அணிகளை காட்டிலும் வரலாற்றில் மிகப்பெரிய அவமானத்தை சந்தித்த மும்பை – விவரம் இதோ

Mumbai Indians MI
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 21-ஆம் தேதி பரபரப்பாக நடைபெற்ற 33-வது லீக் போட்டியில் வெற்றிகரமான அணிகள் என பெயரெடுத்த நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டிக்கு முன்பாக இரு அணிகளுமே தொடர் தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி 2 திண்டாடியதன் காரணமாக கண்டிப்பாக வென்றே தீரவேண்டும் என்ற நிலைமையில் களமிறங்கின. குறிப்பாக 6 போட்டிகளில் 6 தோல்விகளை சந்தித்த மும்பைக்கு வாழ்வா சாவா போட்டியாக நவி மும்பையில் தொடங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

cskvsmi

- Advertisement -

அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 155/7 ரன்கள் சேர்த்தது. காரணம் அந்த அணியின் தொடக்க நம்பிக்கை நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிசான் ஆகியோர் முகேஷ் சவுத்ரி வீசிய முதல் ஓவரில் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

அதனால் 2/2 என மோசமான தொடக்கத்தை பெற்ற மும்பைக்கு நடு வரிசையில் தேவாலட் ப்ரேவிஸ், கைரன் பொல்லார்ட் போன்ற வீரர்கள் ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக இளம் வீரர் திலக் வர்மா 3 பவுண்டரி 2 சிக்சருடன் 51* (43) ரன்கள் எடுத்து காப்பாற்ற நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 32 (21) ரன்கள் எடுத்தார். சென்னை சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் மிரட்டிய முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகளும் பிராவோ 2 விக்கெட்டும் எடுத்தனர்.

Tilak varma 5

தடுமாறிய சென்னை :
இதை தொடர்ந்து 156 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு தொடக்க வீரர் ருதுராஜ் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க அடுத்து வந்த மிட்செல் சான்ட்னர் 11 (9) ரன்களில் ஏமாற்றினார். இதனால் 16/2 என மோசமான தொடக்கத்தை பெற்ற சென்னையை அனுபவ வீரர்கள் ராபின் உத்தப்பா மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு மீட்டனர். இதில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 30 (25) ரன்கள் எடுத்த உத்தப்பாவும் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 40 (35) ரன்கள் எடுத்து ராயுடுவும் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

அந்த நிலைமையில் ஷிவம் துபே 13 (14) கேப்டன் ரவீந்திர ஜடேஜா 3 (8) என அடுத்தடுத்து அவுட்டானதால் 106/6 என்ன திண்டாடிய சென்னை தோல்வியின் பிடியில் சிக்கியது. அந்த நேரத்தில் களமிறங்கிய எம்எஸ் தோனி மற்றும் பிரெடோரியஸ் ஆகியோர் அதிரடியாக ரன்களை குவிக்க முயற்சி செய்தனர். இதில் 2 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 22 (14) ரன்கள் எடுத்த பிரெடோரியஸ் கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட போது உனட்கட் வீசிய முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

MS Dhoni Finisher

அதனால் போட்டியில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது 6, 4, 2, 4 என 16 ரன்களை தெறிக்க விட்ட எம்எஸ் தோனி கடைசி ஓவரில் தனி ஒருவனை போல 28* (13) ரன்களை விளாசி மிரட்டலான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இதனால் 20 ஓவர்களில் 156/7 ரன்களை எடுத்த சென்னை 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது.

- Advertisement -

மும்பைக்கு பெரிய அவமானம்:
இந்த திரில் வெற்றிக்கு பந்துவீச்சில் 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய முகேஷ் சவுத்ரி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதனால் பங்கேற்ற 7 போட்டிகளில் 2-வது வெற்றியை பதிவு செய்த சென்னை புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து 9-வது இடத்தில் நீடித்தாலும் பிளே-ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு வெறும் 4.87% ஆக மட்டுமே உள்ளது.

Mi Mumbai

மறுபுறம் பேட்டிங்கில் ஆரம்பத்திலேயே கோட்டைவிட்ட மும்பை திலக் வர்மாவின் உதவியுடன் நல்ல ஸ்கோரை எட்டியதால் பந்துவீச்சில் கடைசி பந்து வரை முடிந்த அளவுக்கு போராடி தோல்வியடைந்தது. இதன் காரணமாக இந்த வருடம் அந்த அணி பங்கேற்ற 7 போட்டிகளிலும் தொடர்ந்து 7 தோல்விகளை பதிவு செய்துள்ளதால் “ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக தனது முதல் 7 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்த முதல் அணி” என்ற மோசமான வரலாற்று சாதனைக்கு மும்பை சொந்தமாகியுள்ளது.

- Advertisement -

1. இதற்கு முன் கடந்த 2019-ஆம் ஆண்டு பெங்களூரு அணியும் 2013-ஆம் ஆண்டு டெல்லி அணியும் தங்களது முதல் 6 போட்டிகளில் தோல்வி அடைந்ததே அதிகபட்ச தொடர் தோல்விகளாக இருந்தது. அந்த அணிகள் கூட பரவாயில்லை இதுவரை ஒரு சாம்பியன் பட்டத்தை கூட வெல்லாத அணிகள் என்பதால் இதுபோன்ற சாதனை படைத்ததில் ஆச்சரியமில்லை.

Mills-1

3. ஆனால் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என சாதனை படைத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இப்படி வரலாற்று தோல்வியை பதிவு செய்தது உண்மையாகவே அந்த அணியை பொறுத்தவரை மிகப் பெரிய அவமானம் என்றே கருதலாம்.

இதையும் படிங்க : வீடியோ : என்னது நீங்க முதல்ல ஆடுறீங்களா? ஜடேஜாவை டாஸின் போது கலாய்த்த ரோஹித் – என்ன நடந்தது?

4. தற்போதைய நிலைமையில் அடுத்த 7 போட்டிகளில் அந்த அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு 0.134% மட்டுமே என்பதால் ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுடன் முதல் அணியாக மும்பை வெளியேற உள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement