வீடியோ : என்னது நீங்க முதல்ல ஆடுறீங்களா? ஜடேஜாவை டாஸின் போது கலாய்த்த ரோஹித் – என்ன நடந்தது?

Jadeja
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 33-வது லீக் போட்டி நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்தது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரு பெரும் ஜாம்பவான் அணிகள் மோதிய இந்த போட்டி மிக சுவாரஸ்யமாக நடைபெற்றது என்று கூறலாம். ஏனெனில் போட்டியின் கடைசி பந்து வரை எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அனைவரையும் படபடப்பாக வைக்க தல தோனி இறுதிப் பந்தில் பவுண்டரி அடித்து சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

MS Dhoni Finisher

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணியானது துவக்கத்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறினாலும் இறுதியில் ஓரளவு டீசண்டாக விளையாடி 155 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய சென்னை அணி 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

சென்னை அணியும் குறைவான ஸ்கோரை துரத்துவதால் சற்று நிதானமாக ரன்களை சேர்த்து வந்தது. ஆனால் இறுதியில் ஒரு சறுக்கல் ஏற்பட கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் சிக்கியது. அப்போது சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி மற்றும் ஒரு 2 ரன்கள் என 16 ரன்களை கடைசி 4 பந்துகளில் அடித்து அமர்க்களமான வெற்றியை சென்னை அணிக்கு பெற்றுத்தந்தார்.

இப்படி ஒருபுறம் இந்த போட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பை சற்றும் குறைவில்லாமல் பூர்த்தி செய்து சிறப்பாக முடிவடைந்த வேளையில் இந்த போட்டியின் டாஸின் போதே சுவாரசியமான நிகழ்வு மைதானத்தில் அரங்கேறியது. அதன்படி இந்த போட்டிக்கான டாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ரவீந்திர ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாகவும், ரோகித் சர்மா மும்பை அணியின் கேப்டனாகவும் மைதானத்திற்கு வந்தனர்.

- Advertisement -

அப்போது டாசில் வெற்றி பெற்ற ஜடேஜா நாங்கள் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். ஏனெனில் இந்த ஐபிஎல் தொடரில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிகள் சற்று எளிதாக வெற்றி பெற்று வருவதால் வழக்கம்போல் அவர் இந்த முடிவை எடுத்தார். ஆனால் ரோகித்சர்மா ஜடேஜாவை நோக்கி கிண்டலாக : “நீங்கள் முதலில் பேட்டிங் பண்றீங்களா? என்று விளையாட்டாக கேட்டார். இதன் காரணமாக மைதானத்தில் சில நிமிடங்கள் சிரிப்பலை எழுந்தது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 தொடரில் பொழியும் சிக்ஸர் மழை : வரலாற்றில் பிரம்மாண்ட சிக்ஸர்களை பறக்கவிட்ட டாப் 10 வீரர்கள்

அதோடு போட்டி தொகுப்பாளரும் அவர்களுடன் இணைந்து சிரிக்கவே சற்று கலகலப்பான நிகழ்வு அங்கு அரங்கேறியது. பின்னர் ரோகித் சர்மா பேட்டிங் செய்ய களமிறங்கியதும் தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆகி ஆட்டமிழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement