ஐபிஎல் 2022 தொடரில் பொழியும் சிக்ஸர் மழை : வரலாற்றில் பிரம்மாண்ட சிக்ஸர்களை பறக்கவிட்ட டாப் 10 வீரர்கள்

Six
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மிகுந்த விறுவிறுப்பான 3-வது வாரத்தைக் கடந்து பல எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. பொதுவாகவே ஐபிஎல் என்றால் அதில் விளாசப்படும் ரன்களும் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமே இந்த தொடரை இவ்வளவு பிரபலமாக்கியுள்ளது. அதிலும் சிக்சர் மழை பொழிந்து பிரம்மாண்ட சிக்ஸர்களை பறக்கவிடும் பேட்ஸ்மேன்களை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் இந்த ஐபிஎல் போட்டிகளை பார்ப்பார்கள். அதேபோல் ஒவ்வொரு முறையும் ஒரு பேட்ஸ்மேன் சிக்சர் அடிக்கும் போதும் அது எத்தனை மீட்டர் செல்கிறது என்பதை பார்க்காத ரசிகர்களும் இருக்க முடியாது. அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொலைவுக்கு பிரம்மாண்ட சிக்ஸர்களை பார்க்க விட்ட டாப் 10 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்.

rohith

- Advertisement -

10. ரோஹித் சர்மா: அசாலட்டாக சிக்ஸர் அடிப்பதில் கில்லாடியான இந்தியாவின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் கடந்த 2009-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய அவர் கொல்கத்தாவுக்கு எதிரான ஒரு போட்டியில் வங்கதேச வீரர் மஷ்ரபி மோர்டசா வீசிய பந்தில் 115 மீட்டர் சிக்ஸரை பறக்க விட்டு இந்தப் பட்டியலில் 10-வது இடம் பிடிக்கிறார்.

9. கெளதம் கம்பீர்: இந்தியாவிற்காக உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்காற்றிய கௌதம் கம்பீர் ஐபிஎல் தொடரில் கொல்கதாவின் கேப்டனாக 2 கோப்பைகளை வென்று அசத்தியுள்ளார். ஒரு தொடக்க வீரராக அதிரடியாக ரன்களை விளாசி வந்த அவர் கடந்த 2013ஆம் ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக விளையாடியபோது ராஜஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் அந்த அணியின் ஸ்ரீசாந் வீசிய பந்தை 117 மீட்டர் சிக்சராக பறக்கவிட்டு இந்த பட்டியலில் 9-வது இடம் பிடிக்கிறார்.

Gambhir

8. பென் கட்டிங்: ஹைதராபாத் அணிக்காக ஆஸ்திரேலிய வீரர் பென் கட்டிங் கடந்த 2016 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடிய மற்றொரு நட்சத்திரம் ஷேன் வாட்சன் வீசிய பந்தில் 117 மீட்டர் மெகா சிக்ஸரை பறக்க விட்டு இந்த பட்டியலில் 8-வது இடம் பிடிக்கிறார். சின்னசாமி மைதானத்தில் நடந்த அந்த மாபெரும் இறுதிப்போட்டியில் வெறும் 15 பந்தில் 39 ரன்களை அடித்த அவர் ஹைதராபாத் முதல்முறையாக கோப்பையை வெல்ல துருப்புச் சீட்டாக செயல்பட்டார்.

- Advertisement -

7. ராஸ் டெய்லர்: சமீபத்தில் ஓய்வு பெற்ற நியூசிலாந்து நட்சத்திரம் ராஸ் டைலர் கடந்த 2008இல் பெங்களூர் அணிக்காக விளையாடிய போது சென்னைக்காக விளையாடிய மற்றொரு நியூசிலாந்து பவுலர் ஜேக்கப் ஓரம் வீசிய ஒரு பந்தில் 119 மீட்டர் மெகா சிக்சரை பறக்க விட்டு இந்த பட்டியலில் 7-வது இடம் பிடிக்கிறார். அப்போட்டியில் 54 (32) ரன்களை அதிரடியாக அவர் எடுத்த போதிலும் சென்னை வெற்றி பெற்றது.

yuvi

6. யுவராஜ் சிங்: 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்து வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியாவின் சிக்ஸர் கிங் யுவ்ராஜ் சிங் கடந்த 2009இல் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐபிஎல் தொடரில் செஞ்சூரியன் மைதானத்தில் சென்னைக்கு எதிரான ஒரு போட்டியில் தென்னாப்பிரிக்க பவுலர் அல்பி மோர்கெல் வீசிய பந்தில் 119 மீட்டர் அதிரடி சிக்சரை பறக்க விட்டு இந்தப் பட்டியலில் 6வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

5. கிறிஸ் கெயில்: ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்சர் அடித்த பேட்ஸ்மேன் என்ற மெகா சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் கடந்த 2013-ஆம் ஆண்டு புனே அணிக்கு எதிராக 175 ரன்கள் விளாசி டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த வீரர் என்ற சரித்திரத்தை படைத்தார். சின்னசாமி மைதானத்தில் வீசிய அந்த சூறாவளி புயல் இன்னிங்ஸ்சில் இந்திய பவுலர் அசோக் திண்டா வீசிய ஒரு பந்தில் 119 மெகா சிக்ஸரை பறக்க விட்ட அவர் இந்தப் பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

4. ராபின் உத்தப்பா: தற்போது சென்னை அணியின் தொடக்க வீரராக அதிரடியாக விளையாடி வரும் ராபின் உத்தப்பா கடந்த 2010இல் பெங்களூர் அணிக்காக விளையாடிய போது 120 மீட்டர் அதிரடி சிக்சரை பறக்க விட்டு இந்த பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

3. ஆடம் கில்கிறிஸ்ட்: கிரிக்கெட் வரலாற்றில் விக்கெட் கீப்பர்கள் இலக்கணத்தை மாற்றியமைத்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கடந்த 2011-ஆம் ஆண்டு பெங்களூருவுக்கு எதிராக அழகான தரம்சாலா மைதானத்தில் நடந்த பெங்களூருக்கு எதிரான ஒரு போட்டியில் அதன் பவுலர் சார்ல் லாங்வெல்ட் வீசிய பந்தில் 122 மீட்டர் மெகா சிக்சரை பறக்க விட்டு ஐபிஎல் வரலாற்றில் அதிக தொலைவிற்கு சிக்ஸர் அடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

Morkel

2. பிரவீன் குமார்: இந்தப் பட்டியலில் முன்னாள் இந்திய பவுலர் பிரவீன்குமார் இருப்பது ஆச்சரியம் என்றாலும் கடந்த 2008-ஆம் ஆண்டு பெங்களூருவுக்காக ராஜஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் விளையாடியபோது 78/6 என தடுமாறிய பெங்களூரு அணிக்காக களமிறங்கிய அவர் ராஜஸ்தான் பவுலர் யூசுப் பதான் வீசிய ஒரு பந்தில் 124 மீட்டர் முரட்டுத்தனமான சிக்ஸரை பறக்கவிட்டு பிரமிக்க வைத்தார்.

இதையும் படிங்க : அவரு டேலன்ட் தான். ஆனா உடனே எல்லாம் இவருக்கு அணியில் வாய்ப்பு லாம் தரக்கூடாது – கபில் தேவ் வெளிப்படை

1. அல்பி மோர்கெல்: தென்ஆபிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் அல்பி மோர்கல் ஆரம்ப காலகட்டங்களில் சென்னை அணியில் ஆல் ரவுண்டராக அசத்தி வெற்றிக்கு பங்காற்றியதை யாரும் மறந்திருக்க முடியாது. அந்தவகையில் கிறிஸ் கெயில், எம்எஸ் தோனி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற வீரர்களை காட்டிலும் முதலிடம் பிடிக்கும் அளவுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு நடந்த முதல் ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய சுழல் பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா வீசிய ஒரு பந்தில் 125 மீட்டர் பிரம்மாண்ட சிக்ஸரை தெறிக்கவிட்ட அவர் ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சிக்ஸரை பறக்க விட்ட வீரராக இன்றும் சாதனை படைத்துள்ளார். (குறிப்பு : சிக்சரின் அளவுகள் ஒன்றாக இருக்கையில் அந்த சிக்ஸர் அடிக்கப்பட்ட ஆண்டினை பொறுத்து பட்டியலில் இடம் வழங்கப்பட்டுள்ளது)

Advertisement