அவரு டேலன்ட் தான். ஆனா உடனே எல்லாம் இவருக்கு அணியில் வாய்ப்பு லாம் தரக்கூடாது – கபில் தேவ் வெளிப்படை

kapil dev
- Advertisement -

எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை எகிற வைத்துள்ள ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 3-வது வரத்தைக் தொடர்ந்து மும்பை நகரில் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் வாரத்தின் போது அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடிய கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதன்பின் சென்னை, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு எதிரான அடுத்த 4 போட்டியில் வரிசையாக தொடர் வெற்றிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களுக்குள் நுழைந்தது. அந்த அணியைச் சேர்ந்த பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் ஒன்றாக கைகோர்த்து கூட்டணியாக செயல்படுவதே இந்த அடுத்தடுத்த வெற்றிகளுக்கான ரகசியமாக பார்க்கப்படுகிறது.

PBKS vs SRH

- Advertisement -

ஏனெனில் மும்பை, சென்னை போன்ற வெற்றிகரமான அணிகளில் உள்ள பவுலர்கள் ஒரே ஓவரில் 30 ரன்களை வாரி வழங்கி வெற்றியை கோட்டை விடும் நிலையில் ஐதராபாத்தில் உள்ள பவுலர்கள் எதிரணியை மொத்தமாக 160 ரன்களைக் கூட அடிக்க முடியாத அளவுக்கு துல்லியமாக பந்துவீசி சோளியை முடித்துவிடுகிறார்கள். வேகமும் தேவைப்படும் நேரத்தில் மெதுவாக பந்து வீசும் திறமையை பெற்றுள்ள அனுபவ வீரர் புவனேஷ்வர் குமாருடன் ஜோடியாக அசத்தும் தமிழக வீரர் நடராஜன் அந்த அணியின் பந்துவீச்சை தரமானதாக மாற்றியுள்ளார்.

மிரட்டலான உம்ரான் மாலிக்:
இவர்களுடன் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வெறும் 22 வயதே நிரம்பிய இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இடம் பெற்றுள்ளது ஹைதராபாத் பந்துவீச்சை மிரட்டலானதாக காட்சியளிக்க வைக்கிறது. ஏனெனில் குறைந்தபட்சமாக 140 கி.மீ வேகத்தில் பந்து வீசும் அவர் அதிகபட்சமாக 150 கி.மீ பந்துகளை அசால்டாக தொடர்ச்சியாக வீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலை கொடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார். குறிப்பாக சென்னைக்கு எதிரான போட்டியில் 153.3 கி.மீ வேகப் பந்தை வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய பவுலர் என்ற சாதனை படைத்துள்ளார்.

Umran Malik

இந்த அளவுக்கு எக்ஸ்பிரஸ் வேகத்தை உபயோகிக்கும் அவர் அதற்கு ஈடாக ரன்களை வாரி வழங்கி வந்தார். இருப்பினும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய கடைசி 2 போட்டிகளில் வேகத்துடன் கூடிய விவேகத்தை பயன்படுத்திய அவர் குறைவான ரன்களைக் கொடுத்து நிறைவான விக்கெட்டுகளையும் எடுக்க தொடங்கியுள்ளார். மேலும் பஞ்சாப்க்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்காத அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து மெய்டன் ஓவராக வீசி ஜாம்பவான் லசித் மாலிங்கவின் சாதனையையும் சமன் செய்தார்.

- Advertisement -

ஜஸ்ட் ஆரம்பம் தான்:
இப்படி ஆரம்பத்திலேயே மிரட்டலான மின்னல்வேக பந்துகளை வீசி எதிரணிகளை அச்சுறுத்தும் அவருக்கு வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களை கொண்ட ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் என பலரும் இப்போதே கோரிக்கை வைக்கின்றனர்.

Umran

குறிப்பாக எந்த வித தயக்கமும் இல்லாமல் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என முன்னாள் ஜாம்பவான்கள் சுனில் கவாஸ்கர், ரவிசாஸ்திரி போன்றவர்கள் தெரிவித்தனர். ஆனால் வெறும் ஒருசில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு ஆரம்ப கட்டத்தில் மட்டுமே இருக்கும் அவரின் செயல்பாடுகளை பொறுமை காத்து பார்த்த பின்புதான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் ஜாம்பவான் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வேகம் என்பது அவ்வளவு முக்கியமானது கிடையாது. தொடர்ச்சியாக நல்ல வேகத்தில் வீசுவதே முக்கியமாகும். அதை ஒரு போட்டியில் செய்து காட்டுவது பெரிதல்ல. தொடர்ச்சியாக 15 – 20 போட்டிகளில் செய்வதே மிகவும் முக்கியமானதாகும். அவரின் இந்த வளர்ச்சி மிகப்பெரிய சாதனையாகும். கடந்த காலங்களில் இந்தியாவில் அந்த அளவுக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. ஆனால் தற்போது உலகத்துடன் போட்டிபோடும் அளவுக்கு நாம் முன்னேறியுள்ளதற்கு ஐபிஎல் தொடருக்காக நன்றி சொல்ல வேண்டும். முன்பைவிட கிரிக்கெட்டுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் நிறைய வசதிகளை தற்போது செய்து கொடுத்து வருவது நிறைய இளம் வீரர்களுக்கு பயனுள்ளதாக அமைந்து வருகிறது” என்று கூறினார்.

தற்போது 22 வயது மட்டுமே நிரம்பிய உம்ரான் மாலிக் வெறும் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார் என்பதற்காக அவசரப்பட்டு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று கூறியுள்ள கபில்தேவ் 15 – 20 போட்டிகளுக்கு மேல் தொடர்ச்சியாக அவர் அதை செய்து காட்டும் வரை காத்திருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவர் வீசும் 145 – 150 கி.மீ வேகப்பந்துகளை விட தேவையான அளவுக்கு வேகப்பந்துகளை தொடர்ச்சியாக வீசுவதே முக்கியம் என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : என்ன சொல்றிங்க ! 175 கி.மீ வேகம் வீசக்கூடிய ஜூனியர் மலிங்காவா, சென்னையின் மாஸ்டர் பிளான் இதோ

இருப்பினும் இந்த வயதிலேயே இவ்வளவு வளர்ச்சியை பெற்றுள்ள உம்ரான் மாலிக் பாராட்டுக்குரியவர் என்று பாராட்டியுள்ள கபில் தேவ் அவரை அடையாளம் காட்டிய ஐபிஎல் தொடருக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.

Advertisement