மகளிர் ஐபிஎல் 2023 : மும்பை மீண்டும் மிரட்டல் வெற்றி, ஆரம்பத்திலேயே கால்குலேட்டரை கையில் எடுக்கும் ஆர்சிபி ரசிகர்கள்

Womens RCB
- Advertisement -

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் மகளிர் ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 அணிகள் பங்கேற்கும் பெரிய தொடராக கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்தொடரில் மார்ச் 6ஆம் தேதியன்று மும்பையில் உள்ள ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 4வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. தனது முதல் போட்டியில் மும்பை அதிரடியான வெற்றி பெற்ற படுதோல்வியை சந்தித்த பெங்களூரு இப்போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

அந்த நிலைமையில் இரவு 7.30 மணிக்கு தொடங்கி போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 2 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்ட சோபி தேவின் 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் 16 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்து வந்த தீஷா கசட் டக் அவுட்டாகிய ஏமாற்றினார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அதிரடி காட்ட முயன்ற நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 5 பவுண்டரியுடன் 23 (17) ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்து வந்த மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் ஹீதர் நைட் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

மாறாத ஆர்சிபி:
அதனால் 43/4 என தடுமாறிய அந்த அணிக்கு எலிஸ் பெரி 13 (7), ரிச்சா கோஸ் 26 (23), அகுஜா 22 (13), ஸ்ரேயங்கா பாட்டில் 23 (15), மேகன் ஸ்கட் 20 (14) என லோயர் ஆர்டர் வீராங்கனைகள் கணிசமான ரன்களை அடித்து காப்பாற்றினர். ஆனாலும் 18.4 ஓவரில் 155 ரன்கள் சுருட்டிய மும்பை சார்பில் அதிகபட்சமாக ஹேய்லே மேத்தியூஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 156 ரன்களை துரத்திய மும்பைக்கு 45 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 4 பவுண்டரியுடன் 23 (19) ரன்கள் குவித்த யாஸ்டிகா பாட்டியா ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்து அவுட்டானார்.

ஆனால் அவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீராங்கனை ஹேய்லே மேத்தியூஸ் முதல் ஓவர்லிருந்தே பெங்களூரு பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார். குறிப்பாக அடுத்து வந்த நட் ஸ்கீவருடன் ஜோடி சேர்ந்து ஓவருக்கு 10 ரன்கள் வீதம் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் கடைசி வரை அவுட்டாகாமல் 2வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 13 பவுண்டரி 1 சிக்சருடன் 77* (38) ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

அவருடன் நட் ஸ்கீவர் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 55* (29) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 14.2 ஓவரிலேயே 159/1 ரன்கள் எடுத்த மும்பை 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்று ஹர்மன்ப்ரீத் தலைமையில் களமிறங்கிய 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து கோப்பையை வெள்ளப்போகும் வழியாக அதிரடி காட்டி வருகிறது.

மறுபுறம் மந்தனா, எலிஸ் பெரி போன்ற தரமான வீராங்கனைகளை ஏலத்தில் வெற்றிகரமாக வாங்கி விட்டதால் ஆடவர் தொடரை மிஞ்சி மகளிர் தொடரில் பெங்களூரு அணி முதல் சீசனிலேயே கோபியில் வெல்லப் போவதாக அந்த அணி ரசிகர்கள் கடந்த மாத முதலே பேசி வந்தனர். ஆனால் ஆடவர் தொடரில் எப்படி பல நட்சத்திர ஜாம்பவான்கள் விளையாடியும் முக்கிய நேரங்களில் சொதப்பியதோ அதே போல் மகளிர் தொடரிலும் சொதப்பும் பெங்களூரு அணி முதல் வெற்றியை பதிவு செய்வதற்குள் 2 அடுத்தடுத்த படு தோல்விகளை சந்தித்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக மோசமான பவுலின் காரணமாக பலமுறை வெற்றிகளை கோட்டை விட்ட ஆடவர் பெங்களூரு அணிக்கு நிகராக மகளிர் அணியிலும் சில வீராங்கனைகள் ரன்களை வாரி வழங்கும் நிலையில் மந்தனா போன்ற நம்பிக்கை நட்சத்திரங்களும் இதுவரை பெரிய அளவில் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை.

இதையும் படிங்கIND vs AUS : துணிவு இல்லாதவங்க தான் அப்டி சொல்வாங்க, இந்தியாவின் பிட்ச் பற்றி டேனியல் வெட்டோரி ஓப்பன்டாக்

அதனால் ஆரம்பத்திலேயே தொடர் தோல்விகளை சந்தித்துள்ள பெங்களூரு மேற்கொண்டு பிளே ஆப் சுற்றுக்கு செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய இப்போதே அந்த அணி ரசிகர்கள் கால்குலேட்டரை கையில் எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

Advertisement