IND vs AUS : துணிவு இல்லாதவங்க தான் அப்டி சொல்வாங்க, இந்தியாவின் பிட்ச் பற்றி டேனியல் வெட்டோரி ஓப்பன்டாக்

Vettori
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டிகளில் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டாலும் 3வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்தது. அதனால் தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்ட அந்த அணி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று சாதனை படைத்தது. முன்னதாக இத்தொடர் துவங்குவதற்கு ஒரு மாதம் முன்பிலிருந்தே இந்தியா வெற்றி பெறுவதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைத்துள்ளதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த அனைவரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Pujara

- Advertisement -

அந்த நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு நாக்பூர், டெல்லியை விட 4.8 டிகிரி அளவுக்கு முதல் நாளிலேயே சுழன்ற இந்தூர் பிட்ச் மிகப்பெரிய சவாலாக அமைந்து இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் மோசம் என்று ரேட்டிங் வழங்கி 3 கருப்பு புள்ளிகளை ஐசிசி தண்டனையாக வழங்கிய இந்தூர் பிட்ச்சில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா உள்ளிட்ட எந்த பேட்ஸ்மேன்களாலும் தாக்குபிடித்து ரன்களை அடிக்க முடியாது என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சித்தார்.

டேனியல் வெட்டோரி கருத்து:
அத்துடன் என்ன தான் இந்தியாவில் சுழல் இருப்பது இயற்கை என்றாலும் பொதுவாக முதல் 3 நாட்கள் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்து கடைசி 2 நாட்களில் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதே இந்திய மைதானங்களின் இலக்கணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போதெல்லாம் 3 நாட்கள் தாண்டாத அளவுக்கு இந்தியாவில் இருக்கும் மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் துணிவு இல்லாதவர்கள் தான் பிட்ச்களை பற்றி விமர்சிப்பார்கள் என்று இந்திய மைதானங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் நியூசிலாந்து வீரர் மற்றும் ஆஸ்திரேலிய துணை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறியுள்ளார்.

IND vs AUS Indore Pitch

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பிட்ச் எப்படி இருந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை. ஏனெனில் அது இருவருக்கும் பொதுவானது என்று நான் கருதுகிறேன். அதே போல் இது போன்ற மைதானங்களில் டாஸ் வெல்வது முக்கியம் என்றும் நான் நினைக்கவில்லை. இருப்பினும் இங்கே என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். அது ஆரம்பத்திலேயே சுழலும் என்பதால் நீங்கள் அதற்கேற்றார் போல் தயாராகி வர வேண்டும். மேலும் அது நீங்கள் உங்களுடைய நுணுக்கத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் அனுமதியையும் கொடுக்கிறது”

- Advertisement -

“அத்துடன் அந்த சூழ்நிலைக்கேற்ப பேட்ஸ்மேன்களும் தயாராக இருக்க வேண்டும். இது போன்ற சூழ்நிலைகள் நீங்கள் விடாமுயற்சியுடன் துணிச்சலான செயல்பாடுகளை வெளிப்படுத்த அனுமதிக்கிறது என்று நான் நினைக்கிறேன். இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் 30 ரன்கள் எடுப்பது கூட பெரிதாக அமையலாம். ஆனால் அந்த 30 ரன்களை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ள போகிறீர்கள் என்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். எல்லாவற்றையும் விட அதை ஏற்றுக் கொள்வது தான் சவாலாகும். இதை சொல்வதை விட செய்வது எளிதானது” என்று கூறினார்.

Vettori

இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே கலவையான விமர்சனங்கள் இருக்கும் நிலையில் டேனியல் வெட்டோரி போல சிலர் மட்டுமே சுழலுக்கு சாதகமான மைதானங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அத்துடன் வேகத்துக்கு சாதகமான மைதானங்கள் இருப்பது போல சுழலுக்கு சாதகமான மைதானங்களும் இருப்பதில் எந்த தவறுமில்லை. மேலும் சுழல் பந்து வீச்சை எதிர்கொள்வதும் தரம், திறமை பொறுமையை சோதிக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு அங்கம் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:விராட் கோலி இல்ல, அவர் தான் டி20 கிரிக்கெட்டிம் ஆல் டைம் கிரேட் பிளேயர் – ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டு

எனவே இது போன்ற மைதானங்களில் விளையாடுவதற்கு துணிவு இல்லாதவர்கள் தான் அப்படி விமர்சிப்பார்கள் என்று தெரிவிக்கும் டேனியல் வெட்டோரி அதில் விளையாடுவதற்கு தேவையான பயிற்சிகளை எடுத்து தயாராக வேண்டுமே தவிர விமர்சிப்பதில் எந்த பயனுமில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement