LSG vs MI : பழைய ரெக்கார்ட எடுத்து பாருங்க, லக்னோவை செஞ்சி விட்ட மும்பை சாதனை மாஸ் வெற்றி – சிஎஸ்கே’வுடன் மோதுமா?

MI vs LSG
- Advertisement -

உச்சகட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த குஜராத்தை குவாலிபயர் 1 பிளே ஆப் போட்டியில் சென்னை தோற்கடித்து ஃபைனலுக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்த லக்னோ மற்றும் வெற்றிகரமான மும்பை அணிகள் மோதிய எலிமினேட்டர் போட்டி மே 24ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 11 (10) ரன்னில் அவுட்டாகி ஏமாற்ற மற்றொரு தொடக்க வீரர் இசான் கிசானும் 3 பவுண்டரியுடன் 15 (12) ரன்களில் நடையை கட்டினார்.

அதனால் 38/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய மும்பைக்கு அடுத்ததாக களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் தமக்கே உரித்தான பாணியில் 2 பவுண்டரி 2 சிக்ஸரை பறக்க விட்டு 3வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டிய போது 33 (20) ரன்கள் அவுட்டாக்கிய நவீன் அதே ஓவரில் மறுபுறம் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடியாக 41 (23) ரன்கள் எடுத்த கேமரூன் கிரீனையும் காலி செய்தார். அடுத்த சில ஓவர்களில் டிம் டேவிட் சர்ச்சைக்குரிய முறையில் 13(13) ரன்களில் அவுட்டாக திலக் வர்மாவும் 2 சிக்சருடன் 26 (22) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இருப்பினும் கடைசி நேரத்தில் நேஹல் வதேரா அதிரடியாக 2 பவுண்டரி 2 சிக்சருடன் 23 (12) ரன்கள் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் மும்பை 182/8 ரன்கள் எடுக்க லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 183 ரன்களை துரத்திய லக்னோவுக்கு ப்ரெரக் மன்கட் ஆரம்பத்திலேயே 3 (6) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க இம்பேக்ட் வீரராக விளையாடிய கெய்ல் மேயர்ஸ் அதிரடியாக விளையாட முயற்சித்து 3 பவுண்டரியுடன் 18 (13) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதனால் 23/2 என சுமாரான தொடக்கத்தை பெற்ற லக்னோவுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நிதானத்துடன் விளையாட வேண்டிய கேப்டன் க்ருனால் பாண்டியா 8 (11) ரன்னில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் மார்க்கஸ் ஸ்டோனிஸ் அதிரடி காட்டிய நிலையில் எதிர்புறம் வந்த இளம் வீரர் ஆயுஷ் படோனியை 1 (7) ரன்னில் கிளீன் போல்ட்டாக்கிய ஆகாஷ் மாத்வால் அடுத்து வந்த அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரானை கோல்டன் டக் அவுட்டாக்கி லக்னோவின் பாதி வெற்றியை முடித்தார்.

- Advertisement -

எஞ்சிய வெற்றியை மறுபுறம் 5 பவுண்டரி 1 சிக்சரை பறக்கவிட்டு 40 (27) ரன்கள் எடுத்து நம்பிக்கை கொடுத்த ஸ்டோனிஸ் அவசரப்பட்டு ரோகித் சர்மாவின் ரன் அவுட்டால் பெவிலியன் திரும்பியதுடன் பறிபோனது. அடுத்து வந்த வீரர்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 16.3 ஓவரிலேயே 101 ரன்களுக்கு லக்னோவை சுருட்டி 81 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்ற மும்பை சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மாத்வால் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

குறிப்பாக ஏராளமான சாதனைகளையும் 5 கோப்பைகளையும் வென்று வெற்றிகரமாக திகழும் மும்பை ஐபிஎல் தொடரில் 3 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக லக்னோவை இந்த முக்கிய போட்டியில் தோற்கடித்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக பந்து வீச்சுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த போட்டியில் குஜராத்தை சேசிங் செய்யவிடாமல் தோற்கடித்த சென்னையை விட இந்த போட்டியில் அதிக ஸ்கோர் எடுத்த மும்பை பந்து வீச்சிலும் ஆரம்பம் முதலே லக்னோவை அதிரடி காட்ட முடியாமல் துல்லியமாக செயல்பட்டு சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை எடுத்தது.

- Advertisement -

அதன் காரணமாக தோற்றால் வெளியேற வேண்டும் என்று அழுத்தத்தில் சொதப்பிய லக்னோ பேட்ஸ்மேன்கள் சேப்பாக்கம் மைதானத்தை கணித்து விளையாட தவறினர். அதனால் கடந்த வருடத்தை போலவே எலிமினேட்டர் போட்டியில் தோற்ற அந்த அணி முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்தை நிஜமாக்க தவறி வெளியேறியது.

இதையும் படிங்க:LSG vs MI : இது நோ-பால் கிடையாதா? நல்ல ஸ்கோர் எடுத்தும் அம்பயரை விளாசும் மும்பை ரசிகர்கள் – கலாய்க்கும் எதிரணி ரசிகர்கள்

மறுபுறம் இந்த முக்கிய போட்டியில் தங்களை வெற்றிகரமான அணி என்பதை நிரூபிக்கும் வகையில் மிரட்டிய மும்பை பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு அசத்தலான வெற்றி பெற்று மே 26இல் நடைபெறும் குஜராத்துக்கு எதிரான குவாலிஃபயர் 2 விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளது. அந்தப் போட்டியில் வெல்லும் அணி சென்னையுடன் ஃபைனலில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement