LSG vs MI : இது நோ-பால் கிடையாதா? நல்ல ஸ்கோர் எடுத்தும் அம்பயரை விளாசும் மும்பை ரசிகர்கள் – கலாய்க்கும் எதிரணி ரசிகர்கள்

No Ball MI
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த குஜராத்தை குவாலிபயர் 1 போட்டியில் தோற்கடித்த சென்னை நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அந்த நிலைமையில் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதிய எலிமினேட்டர் போட்டி மே 24ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெற்றது. அந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 1 பவுண்டரி 1 சிக்சருடன் 11 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த இசான் கிஷானும் 3 பவுண்டரியுடன் 15 (12) ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் 38/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணியை அடுத்ததாக களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் கடந்த போட்டியில் சதமடித்த கேமரூன் கிரீனுடன் இணைந்து அதிரடியாக விளையாடி சரிவை சரிசெய்ய போராடினார்.

- Advertisement -

குறிப்பாக நல்ல ஃபார்மில் இருக்கும் அந்த ஜோடி சவாலான சேப்பாக்கம் மைதானத்திலும் சிறப்பாக செயல்பட்டு 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமாரை 2 பவுண்டரி 33 (20) ரன்களில் அவுட்டாக்கிய நவீன் அதே ஓவரில் மறுபுறம் அசத்திய கேமரூன் கிரீனையும் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 41 (23) ரன்களில் செய்தார்.

அந்த நிலைமையில் வந்த டிம் டேவிட் 13 (13) ரன்கள் எடுத்த போது யாஸ் தாகூர் வீசியா 17வது ஓவரில் இடுப்புக்கு நேராக வந்த பந்தை சிக்சர் அடிக்கும் முயற்சித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் கிட்டத்தட்ட இடுப்புக்கு மேலே வந்தால் போல் இருந்த அந்த பந்து நோ-பால் என்று டிம் டேவிட் கருதியை போதும் நடுவர்கள் அவுட் கொடுத்ததால் அவர் ஏமாற்றத்துடன் சென்றார். மேலும் அந்தப் பந்து நிச்சயமாக நோபால் தான் என்று மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் நடுவர்களை விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

அதனால் அந்த பந்து சமூக வலைதளங்களில் சர்ச்சை ஏற்படுத்தி விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இருப்பினும் இதே சீசனில் ராஜஸ்தானுக்காக 124 (62) ரன்கள் விளாசிய ஜெய்ஸ்வால் அந்த பந்தை விட தெளிவாக இடுப்புக்கு மேலே வந்த போதிலும் நடுவர்கள் நோபால் என்று அறிவிக்காமல் மும்பைக்கு சாதகமாக அவுட் கொடுத்தனர். அந்த படத்தைத் தோண்டி எடுக்கும் எதிரணி ரசிகர்கள் அது நோபால் இல்லை என்று சொன்னால் இதுவும் நிச்சயமாக நோபால் கிடையாது என்று மும்பை ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கின்றனர்.

அப்படி சர்ச்சைக்கு மத்தியில் தொடர்ந்து நடைபெற்ற அந்த போட்டியில் திலக் வர்மா அதிரடியாக விளையாட முயற்சித்து 2 சிக்சருடன் 26 (22) ரன்களில் அவுட்டானாலும் கடைசி நேரத்தில் நேஹல் வதேரா 1 பவுண்டரி 2 சிக்சருடன் 23* (12) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் மும்பை 182/8 ரன்கள் எடுத்த நிலையில் லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையும் படிங்க:LSG vs MI : இது நோ-பால் கிடையாதா? நல்ல ஸ்கோர் எடுத்தும் அம்பயரை விளாசும் மும்பை ரசிகர்கள் – கலாய்க்கும் எதிரணி ரசிகர்கள்

முன்னதாக நேற்று இதே சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 172 ரன்கள் மட்டுமே அடித்து சேசிங் செய்வதற்கு பெயர் போன குஜராத்தை அபாரமான பந்து வீச்சால் கட்டுப்படுத்தி சிறப்பான வெற்றி பெற்றது. அந்த வகையில் இந்த போட்டியில் வெற்றிக்கு போராடும் அளவுக்கு அதை விட அதிகமான ஸ்கோர் மும்பை எடுத்துள்ளது. எனவே பந்து வீச்சில் அசத்தி சென்னையை போல் வெற்றி பெற அந்த அணி போராடி வருகிறது. இருப்பினும் ஸ்டோனிஸ், பூரான் போன்ற அதிரடி வீரர்களைக் கொண்ட லக்னோ அதற்கு சவாலை கொடுத்து வருகிறது.

Advertisement