முடிவுக்கு வந்த மும்பை – சென்னை வெற்றி சகாப்தம் ! எஞ்சியிருக்கும் அந்த ஒரு பரிதாபத்தை பெறப்போவது யார்?

cskvsmi
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற மிகவும் பிரபலம் அடையாத அணிகள் கூட மிகச் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றன. சொல்லப்போனால் நேற்று முளைத்த காளான்களாய் உருவாக்கப்பட்ட லக்னோ – குஜராத் ஆகிய அணிகள் கூட தொடர் வெற்றிகளால் புள்ளிப் பட்டியலில் டாப் 4 இடங்களைப் பிடித்தன. ஆனால் அதிக கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என்ற பெயரை வாங்கியுள்ள மும்பையும் – சென்னையும் முதல் வாரத்திலிருந்தே தொடர் தோல்விகளைச் சந்தித்தது ரசிகர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியாக அமைந்தது.

cskvsmi

- Advertisement -

வெற்றிகர மும்பை – சென்னை:
1. இதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை தனது முதல் 8 போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்து வரலாற்றிலேயே ஒரு சீசனின் முதல் 8 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்த முதல் அணி என்ற படுமோசமான சாதனை படைத்தது.

2. இத்தனைக்கும் சென்னை உட்பட இதர அணிகளுக்கு கிடைக்காத சொந்த மண்ணில் விளையாடும் வாய்ப்பு அந்த அணிக்கு மட்டும் கிடைத்த போதிலும் ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுடன் முதல் அணியாக மும்பை வெளியேறியது.

MI vs CSK

3. மேலும் ஏற்கனவே கடந்த 2021இல் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாத அந்த அணி ரோகித் சர்மா தலைமையில் அடுத்தடுத்த வருடங்களில் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது இதுவே முதல் முறையாகும்.

- Advertisement -

4. அத்துடன் இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில் 9 தோல்விகளை சந்தித்துள்ள அந்த அணி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வருடத்தில் 9 தோல்விகளை பதிவு செய்த பரிதாபத்திற்கு உள்ளானது.

MI vs CSK 2

5. மறுபுறம் மும்பைக்கு பின் 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாகவும் நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடனும் சென்னை களமிறங்கினாலும் வரலாற்றில் முதல்முறையாக தனது முதல் 4 போட்டிகளில் தோல்வியடைந்து பாதி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை கோட்டை விட்டது.

- Advertisement -

6. அந்த அணியில் தீபக் சாஹர் காயத்தால் விலகியதை விட தேவையின்றி கேப்டன்ஷிப் பொறுப்பை ஜடேஜாவிடம் கொடுத்து அதில் அவர் சொதப்பியதால் மீண்டும் வாங்கிக்கொண்ட எம்எஸ் தோனியின் தவறான முடிவு தோல்விகளுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

MI vs CSK 2

7. தனது பரம எதிரியான மும்பையிடம் 97 ரன்களுக்கு சுருண்ட அந்த அணி 8-வது தோல்வியை பதிவு செய்து 2020க்கு பின் வரலாற்றில் 2-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறியுள்ளது.

- Advertisement -

8. மேலும் இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் 9 தோல்விகளை பதிவு செய்த அந்த அணியும் மும்பையை போலவே வரலாற்றில் முதல்முறையாக ஒரு சீசனில் 9 தோல்விகளை பதிவுசெய்து பரிதாபத்திற்கு உள்ளாகியுள்ளது.

CskvsMi

முடிந்த சகாப்தம்:
இந்த முறை 10 அணிகள் விளையாடுவதால் 2018க்கு பின் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதில் ஹர்டிக் பாண்டியா, பஃப் டு பிளேஸிஸ் போன்ற முக்கிய வீரர்களை இந்த 2 அணிகளும் மீண்டும் வாங்குவதில் தோல்வியடைந்ததே இந்த தோல்விக்கு ஒரு காரணமாகும். சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் எப்படி பரம எதிரிகளோ அதேபோல் ஐபிஎல் தொடரில் மும்பையும் – சென்னையும் என்றால் மிகையாகாது. அதன் காரணமாக களத்தில் இவ்விரு அணிகளும் கோப்பைக்காக மல்லுக்கட்டும் நிலையில் சமூக வலைதளங்களில் இரு அணிகளைச் சேர்ந்த ரசிகர்களும் சண்டைகளில் ஈடுபடுவார்கள்.

1. அப்படிப்பட்ட வெற்றிகரமான இந்த 2 அணிகளில் இதுவரை ஏதேனும் ஒரு அணியாவது பிளே ஆப் சுற்றில் விளையாடி வந்தது. வரலாற்றிலேயே முதல்முறையாக இப்போதுதான் இவ்விரு அணிகளில் எதுவுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியுள்ளது.

2. 2016இல் இவ்விரு அணிகளில் எந்த அணியும் பிளே ஆப் சுற்றில் விளையாடவில்லை. ஆனால் அந்த வருடம் சென்னை தடை பெற்றிருந்தது.

3. அதிலும் 2017, 2018, 2019, 2020, 2021 என கடந்த 5 ஐபிஎல் கோப்பைகளையும் இவ்விரு அணிகள் மட்டுமே வென்று ராஜாங்கம் நடத்தின. ஆனால் தற்போது அந்த அணிகளின் வெற்றி நடையும் மிரட்டலான சகாப்தமும் முடிவுக்கு வந்துள்ளது.

எஞ்சியிருக்கும் அவமானம்:
இதுவரை நடைபெற்றுள்ள 14 தொடர்களில் 9 கோப்பைகளை இந்த 2 அணிகள் மட்டுமே வென்றுள்ளன. அந்த அளவுக்கு வெற்றிகரமான தரமான இவ்விரு அணிகளும் இம்முறை அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்க்காத பல தோல்விகளை முதல் முறையாக சந்தித்து அவமானத்தையும் சந்தித்தன.

1. ஒரு காலத்தில் கோப்பைக்காக புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க சண்டை போட்டுக் கொண்ட இந்த அணிகள் இம்முறை கடைசி இடத்தைப் பிடிக்க சண்டை போட்டு வருகின்றன. அதிலும் வரலாற்றிலேயே மும்பையும் சென்னையும் மட்டும்தான் இதுவரை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்ததே கிடையாது.

2. அந்த நிலைமையில் தற்போது கடைசி 2 இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளில் அந்த அவமானத்தை சந்திக்கப் போவது யார் என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது கடைசி இடத்தில் உள்ள மும்பை தனது எஞ்சிய 2 போட்டிகளில் வென்றால் 9-வது இடத்தை பிடித்து இந்த ஒரு அவமானத்தையாவது தவிர்க்கலாம்.

3. அதேபோல் இந்த அவமானத்தை தவிர்க்க சென்னை தனது கடைசி போட்டியில் நிச்சயம் வென்றே தீரவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அவங்க 2 பேருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தாலும் கிடைக்கும் – கங்குலியே உறுதிசெய்த அந்த 2 பேர்?

4. எது எப்படி இருந்தாலும் பெங்களூரு போன்ற அணிகள் முதல் கோப்பையை வெல்வதற்கே இன்னும் திணறி வரும் நிலையில் அசால்டாக 9 கோப்பையை வென்றுள்ள இவ்விரு அணிகளும் அடுத்த 10 வருடங்கள் ஆனாலும் வெற்றிகரமான ஐபிஎல் அணிகளாக திகழும் என்பதில் சந்தேகமில்லை. எனவே வரும் வருடங்களில் இவ்விரு அணிகளும் நல்ல வீரர்களை தேர்வு செய்து வழக்கமான வெற்றி பாதைக்கு திரும்பும் என்று நம்பலாம்.

Advertisement