அவங்க 2 பேருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தாலும் கிடைக்கும் – கங்குலியே உறுதிசெய்த அந்த 2 பேர்?

Ganguly
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது தற்போது பிளே ஆப் சுற்று போட்டிகளை நெருங்கி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். அந்த வகையில் 10 அணிகளிலும் இடம்பெற்றுள்ள இளம் வீரர்கள் தங்களது அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

Mukesh

- Advertisement -

இப்படி ஒவ்வொரு அணியிலும் சிறப்பாக விளையாடி வரும் சில வீரர்கள் இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்று பல கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் விளையாடி வரும் முகேஷ் சவுத்ரி, மும்பை அணியில் விளையாடி வரும் திலக் வர்மா, ராஜஸ்தான் அணியில் விளையாடி வரும் குல்தீப் சென் போன்ற வீரர்கள் தங்களது அற்புதமான பங்களிப்பை அணிக்கு வழங்கியுள்ளனர்.

இதன் காரணமாக அவர்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு அவர்கள் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர்கள் குறித்து பேசியுள்ள பி.சி.சி.ஐ தலைவரான கங்குலியும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

Umran Malik 5 Fer

இதுகுறித்து அவர் கூறுகையில் : நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு இளம் வீரர்கள் தங்களது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சன்ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசி வருகிறார். எத்தனை பேரால் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச முடியும் என்பது தெரியாது.

- Advertisement -

கண்டிப்பாக வெகு சிலராலேயே அந்த வேகத்தில் பந்து வீச முடியும். அதேபோன்று ராஜஸ்தான் அணியை சேர்ந்த குல்தீப் சென் அற்புதமாக பந்து வீசி வருகிறார். அவர்கள் இருவரும் வெகுவிரைவில் இந்திய அணிக்கு விளையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதையும் படிங்க : கேப்டன் என்ன உங்களுக்கு பியூனா? செலக்சனில் தலையிடும் கொல்கத்தா கோச் – சிஇஓ’வை விளாசும் முன்னாள் வீரர்

இந்த ஐபிஎல் தொடரில் என்னை கவர்ந்த இரண்டு வீரர்கள் இவர்கள் இருவர்தான். அவர்கள் இருவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைத்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என கங்குலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement