கேப்டன் என்ன உங்களுக்கு பியூனா? செலக்சனில் தலையிடும் கொல்கத்தா கோச் – சிஇஓ’வை விளாசும் முன்னாள் வீரர்

KKR-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் 6 வெற்றியும் தோல்வியும் பதிவு செய்து வாழ்வா – சாவா என்ற நிலைமையில் உள்ளது. தற்போது நிலைமையில் தனது கடைசி போட்டியில் அந்த அணி வென்றாலும் கூட அதிர்ஷ்டத்தின் உதவி இருந்தாலும் கூட நாக் அவுட் சுற்றுக்கு செல்ல 90% வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது. இத்தனைக்கும் கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ஸ்ரேயாஸ் அய்யரை பல கோடி ரூபாய் கொடுத்து கடும் போட்டியிட்டு வாங்கிய அந்த அணி நிர்வாகம் தங்களது கேப்டனாக நியமித்தது.

KKR Shreyas Iyer

- Advertisement -

சிஇஓ தலையீடு:
அதனால் கடந்த 2021இல் சென்னைக்கு எதிராக பைனலில் கோட்டைவிட்ட கோப்பையை இந்த முறை எப்படியாவது வென்று 3-வது சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா வெல்லும் என அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்றார் போல் அவர் தலைமையில் முதல் 4 போட்டிகளில் 3 வெற்றியை பதிவு செய்த அந்த அணி முதல் வாரத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் அதன்பின் அணிக்குள் நிகழ்ந்த தேவையில்லாத மாற்றங்களால் 5 வரிசையான தோல்விகளை சந்தித்த அந்த அணி பெரிய பின்னடைவைச் சந்தித்தது.

சொல்லப்போனால் 13 போட்டிகள் முடிந்த பின்பும் கூட இதுவரை அந்த அணியின் ஓபனிங் ஜோடி நிலையாக அமையவில்லை. அதற்கு காரணம் ஒவ்வொரு போட்டியிலும் புதிது புதிதாக மாற்றங்களை அந்த அணி நிர்வாகம் செய்து வருகிறது. இதனால் அந்த அணியின் தேர்வு பற்றி ரசிகர்களும் ஜாம்பவான்களும் பல கேள்விகள் எழுப்பினார்கள். “அணி தேர்வில் பயிற்சியார் பிரண்டன் மெக்கலம் மற்றும் சிஇஓ வெங்கி மைசூர் ஆகியோர் தலையிடுவதால் என்னால் எதுவும் செய்ய முடிவதில்லை” என்று இதுபற்றி ஒரு போட்டிக்கு பின் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ஸ்ரேயாஸ் அய்யர் உண்மையை போட்டுடைத்தது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

KKR

அதிருப்தி:
ஏனெனில் பொதுவாக ஒரு அணியின் 11 வீரர்களை களத்தில் வழிநடத்தும் கேப்டன் தான் தேர்வு செய்வார் என்ற நிலைமையில் கொல்கத்தா அணியின் தேர்வில் சிஇஓ தலையிடுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்நிலையில் சிஇஓ என்பவர் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர அணி சம்பந்தப்பட்ட விஷயத்தை பார்க்கக்கூடாது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எந்த ஒரு விளையாட்டிலும் சிஇஓ என்பவர் என்னைப் பொறுத்தவரை கஜானாவை கவனிக்க வேண்டிய ஒருவர். கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் என மொத்த அணியும் ஒன்று சேர்ந்த பின் அவருக்கு அணியை தேர்வு செய்யும் விசயங்களில் எந்த வேலையும் கிடையாது. எனவே அந்த வேலையை விட்டுவிட்டு பணத்தை எண்ணுவது போன்ற எதாவது வேலை இருந்தால் பாருங்கள். கிரிக்கெட் சம்பந்தமான முடிவுகளை கிரிக்கெட் தெரிந்தவர்களை மட்டும் எடுக்க விடுங்கள்”

Vaughan

“அதனால் தான் கொல்கத்தா அணி தற்போது இந்த நிலைமையில் உள்ளது. ஒருவேளை உங்கள் அணியினர் சரியாக செயல்படவில்லை என்றால் அவர்களை நீக்குங்கள். அதை விட்டுவிட்டு அணியை தேர்வு செய்யும் கேப்டனின் சுதந்திர உரிமையில் தலையிடாதீர்கள். அவ்வாறு செய்தாலே ஐபிஎல் தொடரின் இறுதியில் நீங்கள் மகிழும் அளவுக்கு நல்ல முடிவு கிடைக்கும்” என கூறி சிஇஓ தலையீடு தான் கொல்கத்தாவின் இந்த குழப்பத்திற்கும் தோல்விகளுக்கு காரணம் என்று சாடினார்.

- Advertisement -

பியூனா:
அதேபோல் பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் தலையிடுகிறார் என்று ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தது பற்றி முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மெக்கலாம் பயிற்சியில் பிரச்சனைகள் உள்ளது. அவர் எப்போதும் பிட்ச், மைதானம், ஸ்கோர் பற்றி பார்ப்பது கிடையாது. அவர் எப்போதும் சுதந்திரமாக அதிரடியாக அடிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டவர். அவர் அறிவற்ற கிரிக்கெட்டை பயமின்றி விளையாட நினைக்கிறார்”

Butt

“நீங்கள் ஒருவரை கேப்டனாக நியமித்தால் அவர் ஒரு சில தவறுகளை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். ஆனால் கேப்டன் என்பவர் உங்களது பேச்சை கேட்க வேண்டும் என்பதற்கு உங்களது பியூன் கிடையாது. பிஎஸ்எல் தொடரிலும் லாகூர் அணியில் பயிற்சியாளராக இருந்தபோது அவர் அப்படித்தான் செயல்பட்டார். ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகள் விழுந்தாலும் 15 ஓவர்கள் மீதமிருந்தாலும் நிலைமையைப் பற்றி கவலைப்படாமல் அவர் அதிரடியாக விளையாட வேண்டும் என்று கூறுபவர்”

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியின் இந்த 2 வீரர்களுக்கு இந்திய அணியில் நிச்சயம் வாய்ப்பு இருக்காம் – தீப்தாஸ் குப்தா தகவல்

“அவருக்கு லாகூர் அணி நிர்வாகம் நிறைய வாய்ப்புகள் கொடுத்தது. அவர் எப்போதும் பேட்டிங் பிட்ச்க்கு ஏற்றவாறு திட்டங்களை வகுப்பவர். ஆனால் அது எல்லா சூழ்நிலைகளுக்கும் ஒத்து வராது” என்று கூறினார். தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டுள்ளதால் இந்த வருடம் ஐபிஎல் தொடருடன் கொல்கத்தா அணியில் இருந்து விலக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement