IPL 2023 : கழட்டிவிடப்பட்ட பொல்லார்டுக்கு பதிலாக பலே ஆல்ரவுண்டரை தட்டி தூக்கவுள்ள – மும்பை இந்தியன்ஸ்

Kieron-Pollard
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது தற்போது வரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு 16-வது ஐபிஎல் தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் துவங்க உள்ளது. இந்நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தற்போதே விறுவிறுப்பாக ஆரம்பித்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அடுத்த சீசனுக்கான வீரர்களின் மினி ஏலமானது வரும் டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Kieron Pollard 1

- Advertisement -

இவ்வேளையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ஆம் தேதியான இன்று மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி தற்போது ஒவ்வொரு அணியும் தங்களது அணியிலிருந்து வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று ஜாம்பவான் அணியாக திகழும் மும்பை அணி அவர்கள் அணியில் இருந்து பொல்லார்டை விடுவித்தது தற்போது ரசிகர்களிடையே பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. ஏனெனில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக விளையாடி வரும் பொல்லார்டு மும்பை அணி ஐந்து முறை சாம்பியன் ஆனபோதும் அணியில் இடம் பெற்றிருந்தவர். அதோடு மும்பை அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக பார்க்கப்பட்டு வந்த பொல்லார்டு சமீபத்தில் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாலும் அவரது பார்ம் சறுக்கல் காரணமாகவும் தற்போது மும்பை அணி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

Cameron Green 1

அதேபோன்று அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான மும்பை அணியை பலமான அணியாக மாற்ற வேண்டும் என்பதன் காரணமாகவே பொல்லார்டு அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது. பொல்லார்டு நீக்கப்பட்டாலும் தற்போது அணியில் டிம் டேவிட், பிரேவீஸ் போன்ற வீரர்கள் இருப்பதினால் பின் வரிசையில் அதிரடிக்கட்டும் பலமும் மும்பை அணியிடம் இருக்கிறது.

- Advertisement -

அதே வேளையில் தற்போது பொல்லார்டு வெளியேற்றப்பட்டுள்ளதன் காரணமாக அவருக்கு இணையான ஒரு அதிரடி வீரரை அணியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ள மும்பை அணி சமீபத்தில் இந்தியா சுற்றுப்பயணத்தின் போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கேமரூன் கிரீனை வாங்க திட்டமிட்டுள்ளது. பேட்டிங்கில் துவக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்டுவதோடு மட்டுமின்றி பந்துவீச்சிலும் அசத்தலாக செயல்படக்கூடிய அவர் டி20 உலகக் கோப்பை போட்டியிலும் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகி விளையாடியிருந்தார்.

இதையும் படிங்க : நான் தேர்வுக்குழு தலைவரா இருந்தா இவர்தான் அடுத்த கேப்டன். அப்போதான் இந்தியா ஜெயிக்கும் – ஸ்ரீகாந்த் கருத்து

மும்பை அணி இப்படி பொல்லார்டுக்கு பதிலாக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அதிரடி காட்டும் கேமரூன் கிரீனை வாங்க மும்பை அணி எடுத்திருக்கும் இந்த திட்டம் மாஸ்டர் பிளான் என்றே கூறலாம்.

Advertisement