இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக 17-வது சீசன்களுக்கான முதற்கட்ட வேலைகள் தற்போதே ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடத்தப்பட்டு ஒவ்வொரு அணியிலும் இருந்தும் வீரர்கள் இடமாற்றம் செய்ய இருக்கின்றார். அதோடு அடுத்த ஆண்டு மொத்தம் பத்து அணிகள் மோதும் இந்த தொடரின் போட்டிகளுக்கான எண்ணிக்கையும் ஐபிஎல் நிர்வாகம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது அதன் பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாகவே சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியாமல் இருந்து வருகிறது. குறிப்பாக ரோகித் சர்மாவின் கேப்டன்சி பதவி பறிக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை அந்த அணி தங்களது அணிக்குள் கொண்டு வந்தாலும் நடைபெற்று முடிந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியானது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி இடத்தையே பிடித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த சரிவிற்கு பொல்லார்டின் இடத்தை சரியான வீரரை வைத்து நிரப்ப முடியாமல் போனதே காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் எந்த ஒரு சூழலில் இருந்தாலும் போட்டியை தலைகீழாக மாற்றும் திறமை கொண்ட பொல்லார்டு தனி நபராக பல்வேறு போட்டிகளை வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார். ஆனால் அவரது இடத்திற்காக வந்த டிம் டேவிட் பெரிய அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்.
இதன் காரணமாக மெகா ஏலத்திற்கு முன்பாக டிம் டேவிட்டை அந்த அணியிலிருந்து வெளியேற்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இடத்திற்கு புதிய வீரரை கொண்டுவர நினைக்கும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் பஞ்சாப் அணியின் இளம் வீரரான அஷுதோஷ் சர்மாவை குறி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏனெனில் இந்த ஆண்டு நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி இருந்த அவர் 189 ரன்கள் மட்டுமே குவித்து இருந்தாலும் இறுதிக்கட்டத்தில் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கி சில வெற்றிகளையும் தேடித் தந்துள்ளார்.
அவரது இந்த சிறப்பான ஹிட்டிங் பவர் காரணமாக அவரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மெகா ஏலத்தில் தேர்வு செய்ய காத்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சாத்தியமே இல்லாத ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வெற்றியை நோக்கி வரை அழைத்து சென்ற அஷுதோஷ் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதையும் படிங்க : வேகம் பத்தல.. பாகிஸ்தான் வாரியம் மீது வினோதமான புகார் செய்த வங்கதேச அணி.. விவரம் இதோ
இதன் காரணமாகவே அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் பஞ்சாப் அணியில் பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லாததால் ஒரு சில வீரர்களை மட்டுமே அந்த அணி தக்கவைத்து மற்றவர்களை எல்லாம் வெளியேற்றும் அப்படி அஷுதோஷ் சர்மாவை அவர்கள் வெளியேற்றும் பட்சத்தில் நிச்சயம் மும்பை அணி அவருக்காக பெரிய தொகைக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



