- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஷேன் வார்னே போல, 50வது பிறந்த நாளில் வான்கடே மைதானத்தில் சச்சினுக்கு கொடுக்கப்பட உள்ள உயரிய கெளரவம்

மும்பையை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதில் கடந்த 1989ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற அசுர வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு தனது கேரியரை துவங்கினார். அதனாலேயே ஒரு சில வருடங்களுக்குப் பின் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த அவர் அடித்தால் தான் இந்தியா வெற்றி பெறும் என்ற நிலைமை 90களில் இருந்ததை மறக்க முடியாது. மேலும் சச்சின் அவுட்டானால் இந்தியாவில் ஆஃப் செய்யப்பட்ட தொலைக்காட்சிகள் ஏராளமாக இருந்தன. அந்தளவுக்கு தம் மீது நம்பிக்கை வைத்திருந்த ரசிகர்களை ஏமாற்றாத சச்சின் பெரும்பாலான போட்டிகளில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறி தரமான பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.

அதனால் ஒரு கட்டத்தில் இந்திய அணியின் முதுகெலும்பாக உருவெடுத்து இந்திய பேட்டிங் துறையை தனது தோள் மீது 24 வருடங்கள் சுமந்த அவர் 2011 உலகக் கோப்பை போன்ற நிறைய சரித்திர வெற்றிகளில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் குதிரை கொம்பாக பார்க்கப்பட்ட இரட்டை சதம், 10000 ரன்கள் போன்ற வரலாற்றின் சிறந்த வீரர்களால் எட்ட முடியாத மைல்கல் சாதனைகளை அசால்டாக படைத்த அவர் தற்போதும் சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங் துறையில் பெரும்பாலான சாதனைகளையும் தன்வசம் வைத்துள்ளார்.

- Advertisement -

சச்சினுக்கு கெளரவம்:
அப்படிப்பட்ட மகத்தான அவர் 2013ஆம் ஆண்டு தனது சொந்த ஊரான மும்பையில் ஓய்வு பெற்று பல இளம் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார். தனது சாதனைகளால் சிறந்த ஐசிசி வீரர் முதல் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வரை ஏராளமான கௌரவ விருதுகளை வென்றுள்ள சச்சினுக்கு மும்பையில் இருக்கும் வான்கடே மைதானத்தின் ஒரு பகுதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவ சிலையை நிறுவி அவருக்கு மற்றுமொரு மிகப்பெரிய கௌரவத்தை வழங்க மும்பை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

தங்களது ஊரில் பிறந்து தங்களது வான்கடே மைதானத்தில் விளையாட பழகி சர்வதேச கிரிக்கெட்டில் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திய சச்சினை மேலும் கவுரவப்படுத்தும் வகையில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதியன்று அவருடைய 50வது பிறந்த நாளில் இந்த சிலை அவரது கையாலேயே திறக்கப்படும் என்று மும்பை வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு வீரருக்கு ஒரு மைதானத்தில் முழு உருவ சிலை திறக்கப்படுவது பற்றி மும்பை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“வான்கடே மைதானத்தில் முதல் முறையாக அமைக்கப்படும் இந்த சிலையை எங்கு நிறுவுவது என்பதை நாங்கள் முடிவு செய்ய உள்ளோம். பாரத ரத்னா சச்சின் கிரிக்கெட்டுகாக என்ன செய்துள்ளார் என்பதை அனைவரும் அறிவோம். விரைவில் 50 வயதை தொடும் அவருக்கு எம்சிஏ சார்பில் இது ஒரு சிறிய கௌரவ பரிசாகும். இது பற்றி 3 வாரத்திற்கு முன்பாகவே பேசிய போது அவர் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

இது பற்றி சச்சின் டெண்டுல்கர் பேசியது பின்வருமாறு. “இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. தலைவர் காலே மற்றும் இதர உறுப்பினர்கள் இணைந்து சிலை நிறுவும் இடத்தை நாங்கள் தேர்ந்தெடுக்க உள்ளோம். இது பற்றி ஆரம்பத்தில் என்னிடம் தெரிவித்த போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எனது கேரியர் துவங்கிய இடத்தில் இது போன்ற கௌரவம் கொடுக்கப்படுவது என்னுடைய வட்டத்தின் சிறந்த முடிவாக அமையும். இந்த பயணத்தில் பல மறக்க முடியாத நினைவுகள் இருந்தாலும் 2011 உலக கோப்பையை இங்கே வென்றது சிறந்த தருணமாகும்”

இதையும் படிங்க:தோனிக்கே கேப்டன்ஷிப் அட்வைஸ் கொடுத்து தமது பேட்டிங்கை கேள்வி எழுப்பிய சென்னை ரசிகர் – 2014 பின்னணியை பகிர்ந்த விராட் கோலி

“இவை அனைத்தும் எனது பயிற்சியாளர் ராம்காந்த் அக்ரேகர் அவர்களால் சாத்தியமானது. என்னுடைய கடைசி சர்வதேச போட்டியும் இங்கே நடைபெற்றதால் இந்த தருணம் எனக்கு மிகவும் ஸ்பெஷலாகும்” என்று கூறினார். மொத்தத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தின் வெளியே ஷேன் வார்னேவுக்கு முழு சிலை அமைக்கப்பட்டது போல தற்போது வான்கடே மைதானத்தில் சச்சினின் சிலை அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -