தோனிக்கே கேப்டன்ஷிப் அட்வைஸ் கொடுத்து தமது பேட்டிங்கை கேள்வி எழுப்பிய சென்னை ரசிகர் – 2014 பின்னணியை பகிர்ந்த விராட் கோலி

Virat Kohli MS Dhoni
- Advertisement -

இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல மதம் என்று வல்லுநர்கள் சொன்னார்கள். அந்தளவுக்கு கிரிக்கெட்டை மிகவும் ஆழமாக நேசிக்கும் ரசிகர்கள் அதிகமான போட்டிகளை பார்த்து பார்த்து ஒரு கட்டத்தில் களத்தில் விளையாடும் வீரர்களுக்கு நிகராக அதைப் பற்றிய அனுபவத்தை பெற்று அலசி ஆராய்வார்கள். குறிப்பாக சமூக வலைதளங்கள் வளர்ந்துள்ள இந்த காலங்களில் பல தருணங்களில் கேப்டன் தேர்வு செய்யும் 11 பேர் அணியை விட சில ரசிகர்கள் தேர்வு செய்யும் 11 பேர் அணி வெற்றியை பெற்றுக் கொடுக்கக் கூடியதாக இருப்பதை பல இடங்களில் பார்க்க முடிகிறது.

Virat Kohli Fans

- Advertisement -

அந்த வரிசையில் கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா எம்எஸ் தோனி தலைமையில் 3 – 1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. சச்சின் உள்ளிட்ட முக்கிய வீரர்களின் ஓய்வுக்கு பின் நிகழ்ந்த அந்த சுற்றுப்பயணத்தில் செல்லுபடியாகாத இளம் வீரர்களின் ஆட்டத்துக்கு மத்தியில் முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் களமிறங்கிய விராட் கோலி ஜேம்ஸ் ஆண்டர்சனின் ஸ்விங் பந்துகளை தொட முடியாமல் தனது கேரியரின் உச்சகட்ட மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக 10 இன்னிங்ஸில் வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்த அவரை அணியிலிருந்து நீக்குமாறு ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன.

ரசிகரின் ரகளை:
அந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒரு போட்டிக்காக விமானத்தில் சென்ற தங்களை சந்தித்த ஒரு சென்னை ரசிகர் “என்ன விராட் இப்படி பண்றீங்க, உங்களிடம் நான் சதத்தை எதிர்பார்க்கிறேன்” என்று சலித்துக் கொண்டதாக விராட் கோலி தற்போது தெரிவித்துள்ளார். மேலும் 3 மாதத்தில் தாம் பணி புரியும் நிறுவனத்தில் சேர்மேனாக உயரப்போவதாக அந்த ரசிகர் தெரிவித்ததாக கூறும் விராட் கோலி கேப்டன்ஷிப் பற்றி தோனிக்கே பாடம் எடுத்ததாகவும் யாரும் அறியாத பின்னணியை பகிர்ந்துள்ளார். இது பற்றி ஆர்சிபி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

Kohli dhoni

“இந்த நிகழ்வு 2014 வாக்கில் நடைபெற்றது. குறிப்பாக அந்த சமயத்தில் நான் ஒரு சில ஒருநாள் போட்டிகளில் பெரிய ரன்களை எடுக்கவில்லை. அப்போது நாங்கள் கொச்சியில் இருந்து டெல்லியை நோக்கி விமானத்தில் பயணத்தோம். எங்களுக்கு விமானத்தின் முன்புறத்தில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது சென்னையை சேர்ந்த ஒரு தோனியின் ரசிகர் எங்களை நோக்கி வந்தார். குறிப்பாக என்னிடம் வந்த அவர் “கோலி இந்திய அணியில் என்ன நடக்கிறது. நான் உங்களிடம் அடுத்த போட்டியில் சதத்தை எதிர்பார்க்கிறேன்” என்று நேரடியாக சொன்னார்”

- Advertisement -

“அவர் அவ்வாறு பேசியது எனக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அப்போது நான் அவரிடம் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் எங்கே பணிபுரிகிறீர்கள் என்று விவரங்களை கேட்டிருந்தேன். அதற்கு பணிபுரியும் நிறுவனத்தில் அடுத்த 3 மாதத்தில் சேர்மேனாக முன்னேற போவதாக அவர் தெரிவித்தது எனக்கு நம்ப முடியாததாக அமைந்தது. அதனால் அது எப்படி சாத்தியமாகும்? வீடியோ கேமில் கூட இது போன்ற மாற்றங்கள் நிகழாது என்று நான் அவருக்கு புரிய வைக்க முயற்சித்தேன்”

Kohli

இதையும் படிங்க:இந்திய ஆடுகளங்களில் எப்படி விளையாடனும்னு இவர பாத்து கொத்துக்கோங்க – இளம்வீரர்களுக்கு கைப் அட்வைஸ்

“அத்துடன் அவர் தோனியை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அடுத்த சில நிமிடங்களில் கேப்டன்ஷிப் மற்றும் அணி வீரர்கள் பற்றி பேசிய அவர் தோனிக்கு டிப்ஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டார். அதற்கு முகம் சுளிக்காத தோனி அவரின் ஆலோசனைகளை கேட்டார். ஆனால் எங்களால் அவர் செய்த ரகளைகளை பொறுக்க முடியாததால் “கோச், கோச்” என்று இந்திய வீரர்கள் அனைவரும் சேர்ந்து கூச்சலிட்டோம். ஏனெனில் அவர் அனைவருக்கும் பாடம் எடுக்க முயற்சித்தார். இறுதியில் நாங்கள் அவ்வாறு கூச்சலிட்டதால் சிரித்துக் கொண்டே அங்கிருந்து எழுந்த அவர் தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்தார். அது எனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு வேடிக்கையான நிகழ்வாகும்” என்று கூறினார்.

Advertisement