நெனச்சே பாக்கல.. என்னோட திட்டம் இது தான்.. அறிமுகப் போட்டியிலேயே மிரட்டிய மயங் யாதவ் பேட்டி

Mayank Yadav 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 30ஆம் தேதி நடைபெற்ற 11வது லீக் போட்டியில் பஞ்சாப்பை ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. லக்னோ நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவரில் 199/8 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 54* (38), கேப்டன் நிக்கோலஸ் பூரான் 42* (21), க்ருனால் பாண்டியா 43* (22) ரன்கள் எடுத்தனர்.

பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 2, சாம் கரண் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதை தொடர்ந்து 200 ரன்களை துரத்திய பஞ்சாப் தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 178/5 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. சொல்லப்போனால் அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 70 (50), ஜானி பேர்ஸ்டோ 42 (29) ரன்கள் 102 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் போட்டு நல்ல துவக்கத்தை கொடுத்ததால் வெற்றியை பஞ்சாப் கையில் வைத்திருந்தது.

- Advertisement -

மிரட்டல் அறிமுகம்:
ஆனால் அப்போது 145 – 155 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக பந்து வீசி அவர்களுடைய விக்கெட்டுகளை எடுத்த அறிமுக லக்னோ வீரர் மயங் யாதவ் 4 ஓவரில் வெறும் 27 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து போட்டியை தலைகீழாக மாற்றினார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் பிரப்சிம்ரன் சிங் 19, ஜிதேஷ் சர்மா 6, லியாம் லிவிங்ஸ்டன் 28* ரன்கள் மட்டுமே எடுத்ததால் பஞ்சாப் அணியால் வெற்றி பெற முடியவில்லை.

அந்த வகையில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய மயங் யாதவுடன் சேர்ந்து மோசின் கான் தனது பங்கிற்கு 2 விக்கெட்டுகள் எடுத்து லக்னோ வெற்றியில் பங்காற்றினார். இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்த மயங் யாதவ் சந்தேகமின்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் அறிமுகப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வெல்லும் அளவுக்கு அசத்தவேன் என்று எதிர்பார்க்கவில்லை என மயங் யாதவ் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இப்படி ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. போட்டிக்கு முன் பதற்றமாக இருந்தது. இருப்பினும் என்னுடைய வேகத்தில் சரியாக நின்று ஸ்டம்ப்களை குறி வைக்க முயற்சித்தேன். ஆரம்பத்தில் மெதுவான பந்துகளை பயன்படுத்துவதை பற்றி யோசித்தேன். ஆனால் வேகமான பந்துகளையே பின்பற்றினேன்”

இதையும் படிங்க: 102 ரன்ஸ் பார்ட்னர்ஷிப்.. கையில் வைத்திருந்த பஞ்சாப் வெற்றியை.. 21 வயது சூறாவளி லக்னோ வீரர் பறித்தது எப்படி?

“முதல் விக்கெட் (பேர்ஸ்டோ) சிறப்பானது. இளம் வயதிலேயே அறிமுகமானது நல்லது. எனக்கு சில இலக்குகள் இருந்தன. ஆனால் அதன் குறுக்கே காயங்கள் வந்தால் உதவ முடியாது” என்று கூறினார். அந்த வகையில் அதிரடியான வேகத்தில் பந்து வீசி முதல் போட்டியிலேயே வெற்றியை பெற்றுக் கொடுத்த அவரை நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement