102 ரன்ஸ் பார்ட்னர்ஷிப்.. கையில் வைத்திருந்த பஞ்சாப் வெற்றியை.. 21 வயது சூறாவளி லக்னோ வீரர் பறித்தது எப்படி?

LSG vs PBKS
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 30ஆம் தேதி லக்னோவில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 11வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய லக்னோவுக்கு இம்பேக்ட் வீரராக வந்த கேஎல் ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக வந்த தேவ்தூத் படிக்கல் 9, மார்கஸ் ஸ்டோனிஸ் 19 ரன்களில் அதிரடியாக விளையாட முயற்சித்து அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் எதிர்ப்புறம் பஞ்சாப் அணிக்கு சவாலை கொடுத்த நட்சத்திர துவக்க வீரர் குவிண்டன் டீ காக் 5 பவுண்டரி 2 சிக்சருடன் அரை சதமடித்து 54 (38) ரன்களில் ஆட்டமிழந்தார். அதே போல மிடில் ஆர்டரில் சரவெடியாக 3 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்ட கேப்டன் நிக்கோலஸ் பூரான் 42 (21) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

சூறாவளி வீரர்:
இறுதியில் க்ருனால் பாண்டியா 4 பவுண்டர் 2 சிக்சருடன் 43* (22) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவரில் லக்னோ 199/8 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக சாம் கரண் 3, அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 200 ரன்களை துரத்திய பஞ்சாப்புக்கு கேப்டன் ஷிகர் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி வேகமாக ரன்கள் சேர்த்தனர்.

குறிப்பாக பவர் பிளே ஓவர்கள் கடந்து 12 ஓவர்கள் வரை அபாரமாக விளையாடி 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி பஞ்சாப்பை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது. ஆனால் அப்போது லக்னோவுக்காக அறிமுகமான இளம் இந்திய வீரர் மயங் யாதவ் 145 – 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி ஜானி பேர்ஸ்டோவை 42 (29) ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

அந்த உத்வேகத்தில் 155 கி.மீ வேகத்தை கடந்து வீசிய அவர் அடுத்ததாக வந்த பிரப்சிம்ரன் சிங்கை 19 (7) ரன்களில் அவுட்டாக்கி அடுத்ததாக வந்த ஜிதேஷ் சர்மாவையும் 6 (9) ரன்களில் காலி செய்து போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கினார். ஏனெனில் அடுத்த ஓவரிலேயே எதிர்புறம் நங்கூரமாக விளையாடிய கேப்டன் தவானை 70 (50) ரன்களில் காலி செய்த மோசின் கான் அடுத்ததாக வந்த ஷாம் கரணை டக் அவுட்டாக்கினார்.

அதே போல டெத் ஓவரில் லக்னோ துல்லியமாக பந்து வீசியதால் கடைசியில் லியம் லியம் லிவிங்ஸ்டன் 28*, சாசங் சிங் 9* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் பஞ்சாப் 178/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றி பெற்ற லக்னோ சார்பில் அதிகபட்சமாக அறிமுக போட்டியில் மிரட்டிய மயங் யாதவ் 3, மோசின் கான் 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

இதையும் படிங்க: 199 ரன்ஸ்.. பஞ்சாப்பை வெளுத்த லக்னோவின் கேப்டன்ஷிப் பொறுப்பை பூரானிடம் ஒப்படைத்த ராகுல்.. காரணம் என்ன?

குறிப்பாக தவான் – பேர்ஸ்டோ 102 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் போட்டதால் 11 ஓவர் வரை வெற்றி பஞ்சாப் கையில் இருந்தது. ஆனால் அப்போது சூறாவளியாக 140 – 155 கிலோமீட்டர் வேகத்தில் 6.8 என்ற எக்கனாமியில் துல்லியமாக மிரட்டலாக பந்து வீசிய மயங் யாதவ் பஞ்சாப் வெற்றியை பறித்து லக்னோவுக்கு முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

Advertisement