199 ரன்ஸ்.. பஞ்சாப்பை வெளுத்த லக்னோவின் கேப்டன்ஷிப் பொறுப்பை பூரானிடம் ஒப்படைத்த ராகுல்.. காரணம் என்ன?

Pooran and KL rahul LSG
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 30ஆம் தேதி லக்னோ நகரில் நடைபெற்ற 11வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. சொல்லப்போனால் டாஸ் வீசுவதற்கு கேப்டன் கேஎல் ராகுலுக்கு பதிலாக நிக்கோலஸ் பூரான் வந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது.

இருப்பினும் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் காயத்தை சந்தித்ததை அனைவரும் அறிவோம். அதிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பின்பே அவர் இந்த தொடரின் முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் காயத்திலிருந்து குணமடைந்ததும் உடனடியாக கேஎல் ராகுலை அதிகமாக விளையாட வைத்து ரிஸ்க் எடுக்க லக்னோ நிர்வாகம் விரும்பவில்லை.

- Advertisement -

கேப்டனாக பூரான்:
அதன் காரணமாக இந்த போட்டியில் லக்னோவின் கேப்டன்ஷிப் பொறுப்பு தற்காலிகமாக நிக்கோலஸ் பூரானிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே சமயம் கே.எல் ராகுல் இம்பேக்ட் வீரராக விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய லக்னோவுக்கு அர்ஷிதீப் வேகத்தில் ஆரம்பத்திலேயே கே.எல் ராகுல் 15 (9) ரன்களில் அவுட்டானார்.

அப்போது வந்த தேவ்தூத் படிக்கல் 9, மார்கஸ் ஸ்டோனிஸ் 19 ரன்களில் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் குயிண்டன் டீ காக் அதிரடியாக 5 பவுண்டரி 2 சிக்சருடன் அரை சதமடித்து 54 (38) ரன்கள் குவித்து அவுட்டானார். அப்போது வந்த நிக்கோலஸ் பூரான் தம்முடைய ஸ்டைலில் சரவெடியாக 3 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்டு 42 (21) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

அடுத்ததாக வந்த ஆயுஸ் பஜோனி 8 ரன்னில் அவுட்டானாலும் க்ருனால் பாண்டியா நீண்ட நாட்கள் கழித்து அதிரடியாக விளையாடி கொண்டாட வைத்தார். அந்த வகையில் கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியாக விளையாடிய அவர் நான்கு பவுண்டரி இரண்டு சிக்சருடன் 43* (22) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் லக்னோ 199/8 ரன்கள் குவித்து அசத்தியது.

இதையும் படிங்க: 16 வயதில் செய்து கொடுத்த சத்தியத்தை 20 வயதில் காப்பாற்றிய சி.எஸ்.கே வீரர் சமீர் ரிஸ்வி – என்ன சத்தியம் தெரியுமா?

அதனால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் லக்னோ 200 ரன்களை கட்டுப்படுத்தி சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் பந்து வீச உள்ளது. மறுபுறம் சற்று தடுமாற்றமாகவே செயல்பட்ட பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக சாம் கரண் 3, அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதைத் தொட

Advertisement