16 வயதில் செய்து கொடுத்த சத்தியத்தை 20 வயதில் காப்பாற்றிய சி.எஸ்.கே வீரர் சமீர் ரிஸ்வி – என்ன சத்தியம் தெரியுமா?

Rizvi
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை அணி சார்பாக 20 வயதான இளம் வீரர் சமீர் ரிஸ்வி அறிமுக வீரராக களமிறக்கப்பட்டார். சென்னை அணிக்காக எந்த வீரர் வாங்கப்பட்டாலும் சில ஆண்டுகள் பெஞ்சில் அமர வைக்கப்பட்டே வாய்ப்புகள் வழங்கப்படும். ஆனால் 20 வயதான இவரை நேரடியாக அறிமுக போட்டியில் விளையாட வைத்தது அனைவரது மத்தியிலும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

அதோடு கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துவரும் ரிஸ்வி இந்த ஆண்டுதான் தனது 20-ஆவது வயதில் சென்னை அணியால் தேர்வு செய்யப்பட்டார். அப்படி தேர்வு செய்யப்பட்ட உடனே அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததால் அவருக்கும் இந்த வாய்ப்பு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

- Advertisement -

அதே வேளையில் தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பினை மிகச் சிறப்பாக பயன்படுத்திய சமீர் ரிஸ்வி முதல் போட்டியில் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை என்றாலும் இரண்டாவது போட்டியின் போது குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ரஷீத் கான் பந்துவீசிய போதிலும் தான் சந்தித்த முதல் பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தினார்.

அதோடு மட்டுமின்றி அதே ஓவரில் இரண்டு சிக்ஸர்களையும் அடித்து பிரமிக்க வைத்தார். அவரின் திறமை காரணமாகவே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் தற்போது தனது ஐபிஎல் தேர்வு குறித்து சமீர் ரிஸ்வி பகிர்ந்த சில தகவல்கள் இணையத்தில் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

- Advertisement -

அந்த வகையில் சமீர் ரிஸ்வி தனது 16-வது வயதிலேயே ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்த போதிலும் அந்த சீசனில் அவர் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படவில்லை. அதனை அடுத்து அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என அனைவருமே ஏமாற்றம் அடைந்த வேளையில் அவர்களிடம் :

இதையும் படிங்க : அது சமநிலையா இல்லை.. காலம் காலமாக ஆர்சிபி அணியில் இருக்கும் பிரச்சனை குறித்து.. ஸ்டுவர்ட் ப்ராட்

நிச்சயம் நான் ஒருநாள் ஐபிஎல் தொடரில் தேர்வாவேன். அப்படி தேர்வாகும் சமயத்தில் நான் களமிறங்கும் முதல் போட்டியின் முதல் பந்திலே சிக்ஸர் அடிப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருந்தாராம். அதன்படியே தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து தனது இருபதாவது வயதில் கிடைத்த வாய்ப்பில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அந்த சத்தியத்தை காப்பாற்றி உள்ளார் என்று அவரே கூறியுள்ளது ரசிகர்களை ஆச்சரியம் அடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement