அது சமநிலையா இல்லை.. காலம் காலமாக ஆர்சிபி அணியில் இருக்கும் பிரச்சனை குறித்து.. ஸ்டுவர்ட் ப்ராட்

Stuart Broad
- Advertisement -

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய முதல் கோப்பையை வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் விளையாடி வருகிறது. ஆனால் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ள அந்த அணி வழக்கம் போல தடுமாறி வருகிறது. குறிப்பாக கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த 3வது போட்டியில் விராட் கோலி 83* ரன்கள் எடுத்த உதவியுடன் பெங்களூரு 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதை சேசிங் செய்த கொல்கத்தா பில் சால்ட் 30, சுனில் நரேன் 47, வெங்கடேஷ் ஐயர் 50, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 39* ரன்கள் எடுத்த உதவியுடன் 16.5 ஓவரிலேயே எளிதாக வென்றது. அந்தளவுக்கு ஆர்சிபி பவுலர்கள் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கி வெற்றியை கோட்டை விட்டனர். அதனால் இது போன்ற பவிலிங்கை வைத்துக்கொண்டு பெங்களூரு கோப்பையை வெல்ல முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

காலம் காலமாக:
இந்நிலையில் காலம் காலமாக பெங்களூரு அணியில் பேட்டிங் மிகவும் பவராக இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டுர்ட் பிராட் தெரிவித்துள்ளார். ஆனால் பவுலிங் தான் அதற்கு நேர்மாறாக இருப்பதாக அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் பேலன்ஸ் இல்லாமல் இருப்பதாலேயே பெங்களூரு வெற்றி பெற தடுமாறுவதாகவும் ப்ராட் கூறியுள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பெங்களூருவில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்துள்ள கொல்கத்தாவை பாராட்டும் நீங்கள் ஆர்சிபி அணியின் பவுலிங்கையும் பார்க்க வேண்டும். பிட்ச்சில் கட்டர், ஸ்லோயர் போன்ற பந்துகளை கொல்கத்தா சரியாக வீசியது. அதனால் விராட் கோலி போன்ற சிறந்த பேட்ஸ்மேனாலும் அந்த பந்துகளை தொடர்ச்சியாக அடிக்க முடியவில்லை”

- Advertisement -

“ஆனால் ஆர்சிபி பவுலர்கள் வந்ததும் அதிகப்படியான வேகத்தில் ஷாட்டாகவும் கணிக்கும் வகையிலும் வீசியதால் அந்தப் பந்துகள் பவுண்டரிக்கு வெளியே காணாமல் சென்றன. ஆர்சிபி அணியில் இது தான் பிரச்சினையாகும். பல வருடங்களாக அவர்களுடைய பேட்டிங் ஸ்டார் பவருடன் வலுவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் அவர்களுடைய பவுலிங் கூட்டணி எழுந்து நின்று போட்டிகளை வெற்றி பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு இருப்பது போல் தெரியவில்லை”

இதையும் படிங்க: ஸ்பெஷல் பேட்’டையும் சேர்த்து அந்த பரிசு கொடுத்ததுக்கு நன்றி விராட் பையா.. ரிங்கு சிங் நெகிழ்ச்சி பதிவு

என்னுடைய தனிப்பட்ட பார்வையில் அது பேலன்ஸ் இல்லாத அணியை போல் தெரிகிறது. அவர்களுடைய வெளிநாட்டு வீரர்கள் நன்றாக இருப்பதாக தோன்றுகிறது. ஆனால் அவர்களை வைத்தும் சொந்த மைதானத்தில் இது போல் சந்திக்கும் மோசமான தோல்விகள் எப்படி விளையாட வேண்டும் என்பதில் உங்களுடைய கவனத்தை கூர்மையாக்குகிறது” எனக் கூறினார்.

Advertisement