உம்ரான் மாலிக் மாதிரி இல்ல.. மயங் யாதவ் இந்தியாவுக்கு விளையாடனும்.. காரணம் இதான்.. சேவாக் கருத்து

- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் இரண்டாம் தேதி நடைபெற்ற 15வது லீக் போட்டியில் பெங்களூருவை 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ குயிண்டன் டீ காக் 81, நிக்கோலஸ் பூரான் 40* ரன்கள் எடுத்த உதவியுடன் 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த பெங்களூரு ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 153 ஆல் அவுட்டாகி தங்களுடைய இரண்டாவது தோல்வியை சந்தித்தது. விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த அந்த அணிக்கு அதிகபட்சமாக மகிபால் லோம்ரர் 33 ரன்கள் எடுத்தார். லக்னோ சார்பில் அதிகபட்சமாக 4 ஓவரில் வெறும் 14 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்த மயங் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

இந்திய வாய்ப்பு:
மேலும் கடந்த போட்டியில் அறிமுகமாகி பஞ்சாப்புக்கு எதிராக 3 விக்கெட்டுகள் எடுத்து லக்னோ வெற்றி பெறுவதற்கு உதவிய அவர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் 2 போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதை விட ஆரம்பம் முதலே 145 – 155 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிவேகமான பந்தை வீசிய பவுலராகவும் சாதனை படைத்துள்ளார்.

இத்தனைக்கும் வெறும் 21 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இவ்வளவு வேகத்தில் தொடர்ச்சியாக வீசுவதை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இந்தியா தங்களுடைய வேகப்பந்து வீச்சாளரை கண்டுபிடித்து விட்டதாக ஜாம்பவான் பிரெட் லீ பாராட்டியிருந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இதே வேகத்தில் பந்து வீசி இந்தியாவுக்காக அறிமுகமான உம்ரான் மாலிக் சரியான லைன், லென்த்தை பின்பற்றவில்லை என வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் மயங் யாதவ் வேகத்துடன் விவேகத்தையும் பின்பற்றுவதால் இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பை கொடுக்கலாம் என்று சேவாக் பாராட்டியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “உம்ரான் மாலிக்கை விட மயங் யாதவின் லைன்ஸ் துல்லியமாக இருக்கிறது. அது தான் அவர்களுக்கிடையே உள்ள வித்தியாசம்”

இதையும் படிங்க: ஸ்டம்புக்கு பின்னாடி இருந்து அவரு பவுலிங் பண்றத பாத்தா நெருப்பா இருக்கு – லக்னோ கேப்டன் கே.எல் ராகுல் பேட்டி

“உம்ரான் மாலிக்கும் வேகமாக வீசினார். ஆனால் அவரால் தன்னுடைய லைன் மற்றும் லென்த்தில் முன்னேற்றத்தை காண முடியவில்லை. மறுபுறம் மயங் லைன், லென்த் மிகவும் துல்லியமாக இருக்கிறது. அதே சமயம் அதிரடியான வேகத்தை கொண்டுள்ள நாம் லைனில் கொஞ்சம் தவறு செய்தாலும் பவுண்டரிகளை கொடுப்போம் என்பது அவருக்கு நன்றாக தெரியும். அந்த ஒரு விஷயத்துக்காகவே ஐபிஎல் தொடர் முடிந்த பின்பும் அவர் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.

Advertisement