ஸ்டம்புக்கு பின்னாடி இருந்து அவரு பவுலிங் பண்றத பாத்தா நெருப்பா இருக்கு – லக்னோ கேப்டன் கே.எல் ராகுல் பேட்டி

KL-Rahul
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது பெங்களூரு அணியை அவர்களது சொந்த மண்ணில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் அவர்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தனர். அதேபோன்று இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த பெங்களூரு அணி தங்களது மூன்றாவது தோல்வியை சந்தித்துள்ளது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி பெங்களூரு அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே குவித்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் லக்னோ அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் மாயங்க் யாதவ் 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை நாங்கள் ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்தியிருந்தோம். இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகம் இருந்தது. இருந்தாலும் டி காக் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்திருந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் பெங்களூரு அணி வீரர்கள் மீண்டும் சிறப்பாக பந்துவீசி ஆட்டத்திற்குள் கொண்டு வந்தாலும் இறுதியில் பூரான் மிகச் சிறப்பாக விளையாடி முன்னிலை பெற்று தந்தார். அதே போன்று பந்துவீச்சிலும் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டோம். குறிப்பாக மாயங்க் யாதவ் பந்துவீசுவதை ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து பார்க்கும்போது அற்புதமாக இருக்கிறது. உண்மையிலேயே அவரது வேகத்தில் கீப்பிங் செய்வது சற்று கடினமாகவே உள்ளது.

இதையும் படிங்க : அந்த 2 பேரோட கேட்சை விட்டோம்.. மொத்தமும் போச்சு.. லக்னோ அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

கடந்த இரண்டு போட்டிகளாகவே அவர் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். கடந்த ஆண்டே அவர் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டியது. ஆனால் காயம் காரணமாக அதை தவறவிட்ட அவர் தற்போது மீண்டும் மிக சிறப்பாக தயாராகி வந்துள்ளார். அவரது பந்துவீச்சும் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement