யாரு சாமி நீ.. 155.80 கி.மீ வேகத்தில்.. பும்ரா, உம்ரான் மாலிக் ஓரங்கட்டிய மயங் யாதவ்.. மாஸ் சாதனை

Mayank Yadav 3
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 30ஆம் தேதி நடைபெற்ற 11வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 21 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 199/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 54, கேப்டன் நிக்கோலஸ் பூரான் 42, க்ருனால் பாண்டியா 43* ரன்கள் எடுத்தனர்.

பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஷாம் கரண் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 200 ரன்களை துரத்திய பஞ்சாப் தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 178/5 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. சொல்லப்போனால் அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 70, ஜானி பேர்ஸ்டோ 42 ரன்கள் எடுத்து 102 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து பஞ்சாப்புக்கு வலுவான துவக்கம் கொடுத்தனர்.

- Advertisement -

மாஸ் சாதனை:
அதனால் கண்டிப்பாக பஞ்சாப் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது தன்னுடைய அறிமுகப் போட்டியில் மிரட்டலாக பந்து வீசிய இளம் லக்னோ வீரர் மயங் யாதவ் தொடர் 145 – 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி அவர்களுக்கு சவாலை கொடுத்தார். குறிப்பாக ஷிகர் தவானுக்கு எதிராக 11வது ஓவரின் முதல் பந்தை 155.80 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய அவர் அனைவரையும் வியக்க வைத்தார்.

இதன் வாயிலாக ஐபிஎல் 2024 தொடரில் அதிவேகமான பந்தை வீசிய பவுலர் என்ற மாஸ் சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் இதே தொடரில் டெல்லிக்காக விளையாடும் தென்னாப்பிரிக்க வீரர் நன்ரே பர்கர் 153.00, மும்பைக்காக விளையாடும் ஜெரால்ட் கோட்சி 152.30 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் மிட்சேல் ஸ்டார்க், பும்ரா போன்ற மகத்தான வேகப்பந்து வீச்சாளர்களை வெறும் 21 வயதிலேயே முந்தியுள்ள அவர் அதிவேகமான பந்தை வீசியுள்ளது ரசிகர்களுக்கு வியப்பாக அமைந்தது.

- Advertisement -

அதே சமயம் இவரைப் பார்த்த பல இந்திய ரசிகர்களுக்கு உம்ரான் மாலிக் இப்படித்தான் செயல்பட்டார் என்பது நினைவுக்கு வந்தது. இருப்பினும் தனது அறிமுக ஐபிஎல் போட்டியில் விக்கெட் எதுவும் எடுக்காத உம்ரான் மாலிக் 27 ரன்கள் கொடுத்திருந்தார். ஆனால் அதே வேகத்தில் வீசினாலும் நல்ல லைன், லென்த் ஆகியவற்றையும் பின்பற்றிய மயங் யாதவ் 4 ஓவரில் 27 ரன்களை 6.8 என்ற எகனாமியில் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இதையும் படிங்க: நெனச்சே பாக்கல.. என்னோட திட்டம் இது தான்.. அறிமுகப் போட்டியிலேயே மிரட்டிய மயங் யாதவ் பேட்டி

அப்படி அறிமுகப் போட்டியிலேயே அட்டகாசமான தாக்கத்தை ஏற்படுத்திய அவர் லக்னோ வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். மொத்தத்தில் நல்ல வேகத்துடன் சரியான லைன், லென்த் ஆகியவற்றையும் பின்பற்றி ஆரம்பத்திலேயே ஆட்டநாயகன் விருது வென்றுள்ள மயங் யாதவ் யாரு சாமி நீ என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement