காயம் காரணமாக வெளியேறிய ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக மாற்று வீரர் இவர்தான் – அதிகாரபூர்வ அறிவிப்பு

Ruturaj
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் இந்திய அணி அந்தப் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று தர்மசாலா மைதானத்தில் நடைபெற உள்ளது.

INDvsSL

- Advertisement -

இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஏகப்பட்ட வீரர்கள் ஏற்கனவே காயம் காரணமாக வெளியேறியுள்ளனர். அதிலும் குறிப்பாக கே.எல் ராகுல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடங்குவர். அதுமட்டுமின்றி ஓய்வு காரணமாக ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் அணியில் இருந்து வெளியேறினர். இதன் காரணமாக பல வீரர்களுக்கு இந்திய அணியில் மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி இந்திய அணியின் துவக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இந்த டி20 தொடரில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. எனவே நிச்சயம் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முழுவதுமாக இந்திய அணியின் தொடக்க வீரராக அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் சமீப காலமாகவே அவர் அணியில் இடம்பெற்று வந்தாலும் பல நட்சத்திர வீரர்கள் அணியில் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது.

dravid agarwal

இதன் காரணமாக நிச்சயம் இந்த இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் இவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதலாவது டி20 போட்டியில் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஏனெனில் முதலாவது டி20 போட்டியின் போது அவருக்கு வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது என்று ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அவரது இந்த காயம் குறித்த பரிசோதனை நடைபெற்றது. அதில் அவர் தனது மணிக்கட்டில் ஏற்படுகின்ற இந்த வலியால் தனது பேட்டிங்கிற்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறியதால் மருத்துவ குழு அவரை முழுவதுமாக பரிசோதித்தது.

இதையும் படிங்க : இஷான் கிஷனால நமக்கு 3 யூஸ் இருக்கு. ஆனாலும் அவரை ஓவரா புகழ கூடாது – சுனில் கவாஸ்கர் ஓபன்டாக்

பரிசோதனையின் முடிவில் அவரது காயத்திற்கான சிகிச்சைக்கு அவர் செல்லவேண்டியுள்ளதால் அவரை இந்திய நிர்வாகம் அணியில் இருந்து நீக்கிய பின்னர் அவருக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரரான மாயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement