இஷான் கிஷனால நமக்கு 3 யூஸ் இருக்கு. ஆனாலும் அவரை ஓவரா புகழ கூடாது – சுனில் கவாஸ்கர் ஓபன்டாக்

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறங்கி 59 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 89 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றி அசத்தினார்.

ishan

- Advertisement -

நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் போது மூன்று போட்டிகளில் விளையாடிய இஷான் கிஷன் வெறும் 71 ரன்களை மட்டுமே குவித்தது மட்டுமின்றி ஸ்ட்ரைக் ரேட்டிலும் மிகவும் மந்தமாக செயல்பட்டதால் அவர் மீது சற்று அழுத்தம் ஏற்பட்ட நிலையில் தற்போது இலங்கை அணிக்கு எதிரான இந்த முதல் போட்டியிலேயே தனது திறமையை நிரூபித்து மீண்டும் அசத்தியுள்ளார்.

இருப்பினும் இனிவரும் போட்டிகளிலும் அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. இயற்கையாகவே அதிரடியாக ஆடும் இஷான் கிஷன் ஐபிஎல் ஏலத்திலும் பெரிய தொகைக்கு சென்றதால் அவர் மீது தற்போது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதுவே அவரது பேட்டிங்க்கு அழுத்தமாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் போட்டிகளில் இஷான் கிஷன் எவ்வாறு செயல்படப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இஷான் கிஷனின் ஆட்டம் குறித்து முக்கியமான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

Ishan-Kishan-Keeper

இதுகுறித்து அவர் கூறுகையில் : இஷான் கிஷன் கடந்த முதலாவது போட்டியில் சிறப்பாக விளையாடியது பாராட்ட வேண்டிய ஒன்றுதான். அவருடைய இந்த அதிரடி ஆட்டம் முதல் போட்டியில் சிறப்பாக அமைந்தாலும் யாரும் அவரை விரைவாக புகழ்ந்து விடக் கூடாது ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வேகம் மற்றும் பவுன்ஸ் காரணமாக தடுமாறிய அவர் இந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பந்து கொஞ்சம் அதிகளவு பவுன்ஸ் இல்லாததால் சிறப்பாக விளையாடி விட்டார்.

- Advertisement -

இதேபோன்று இன்னிங்சை அவர் தொடர வேண்டியது அவசியம். இந்த முதலாவது போட்டியில் அவர் விளையாடிய புல் ஷாட் மற்றும் டிரைவ் ஷாட்கள் ஆகியவை சிறப்பாக இருந்தாலும் இனிவரும் போட்டிகளிலும் தொடர்ச்சியாக அவர் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அணியில் நீடிக்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக ரன்களை குவிக்க வேண்டும். எனவே அடுத்து வரும் இரண்டு போட்டிகளை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : பும்ராவிற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சக வீரர். முதல் டி20 நடைபெற்ற சம்பவம் – என்ன நடந்தது?

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அவரிடம் தொடர்ச்சியாக ரன்களை குவிக்கும் திறன் இருக்கும்பட்சத்தில் நிச்சயம் அவர் இந்திய அணிக்கு மூன்று விதமான பலன்களைத் தருவார். அதாவது அவர் ஒரு விக்கெட் கீப்பர் அதுமட்டுமின்றி இடதுகை பேட்ஸ்மேன் அதோடு அவரால் பேட்டிங்கில் ஓபனராகவும் செயல்படமுடியும். 5ஆவது 6ஆவது இடத்திலும் செயல்பட முடியும். எனவே இப்படி மூன்று விதமான பயனுள்ள இந்த வீரர் நிச்சயம் அதிக எதிர்பார்ப்பு மத்தியிலேயே தற்போது விளையாடி வருகிறார்.

இவர் மட்டும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடினால் அவரை அணியில் இருந்து நீக்க முடியாது இருப்பினும் அவர் தற்போது தான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்து உள்ளார். எனவே அவரை வெகு விரைவாக யாரும் புகழ வேண்டாம் என சுனில் கவாஸ்கர் வெளிப்படையாக தனது கருத்தினை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement