- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பும்ரா அதுக்கு தகுதியானவர்ன்னு.. என்னோட ஆலோசகர் தோனியே சொல்லிருக்காரு.. ஹைடன் ஆதரவு

பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இந்திய அணிகள் மோதும் பார்டர் காவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற உள்ளது. நவம்பர் 22ஆம் தேதி துவங்கும் அந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சொந்தக் காரணங்களுக்காக விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் துணை கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவை வழி நடத்துவார் என்று பயிற்சியாளர் கம்பீர் அறிவித்துள்ளார்.

இருப்பினும் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் இதுவரை பெரியளவில் கேப்டன்ஷிப் அனுபவம் கொண்டிருக்கவில்லை. அதனால் சவாலான ஆஸ்திரேலியாவில் அவரால் சாதிக்க முடியுமா என்ற கேள்விக்கு காணப்படுகிறது. இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக செயல்படுவதற்கு தகுதியானவர் என்று தோனி பல வருடங்களுக்கு முன்பே தம்மிடம் தெரிவித்ததாக மேத்தியூ ஹைடன் கூறியுள்ளார்.

- Advertisement -

தோனியே சொன்னாரு:

எனவே பட் கமின்ஸ் போல ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய அணியை சிறப்பாக வழி நடத்துவார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “களத்தில் பும்ராவை பற்றி எனக்கு அதிகமாக தெரியாது. அவருக்கு எதிராக நான் விளையாடியதும் இல்லை. ஆனால் அவரிடம் சிறப்பான கேப்டன்ஷிப் பண்புகள் இருப்பதாக என்னுடைய சிறந்த நண்பர் மற்றும் ஆலோசகர் எம்எஸ் தோனி சொல்லி கேட்டுள்ளேன்”

“சொல்லப்போனால் அவர் கேப்டனாக செயல்படுவதற்கு தகுதியானவர் என்று தோனி பல வருடங்களுக்கு முன்பே தெரிவித்துள்ளார். களத்திற்கு வெளியே பும்ராவுடன் நான் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளேன் விளையாட்டை பற்றிய அவரது அறிவு, கருத்துக்களை வைத்து பும்ரா இங்கு வந்துள்ள இந்திய அணியை வழி நடத்துவதற்கு தகுதியானவர் என்பதை அறிந்து கொண்டேன். இந்த வேலையில் அவர் அசத்துவார் என்று உறுதியாக சொல்வேன்”

- Advertisement -

கமின்ஸ் போல:

“பும்ரா 80 – 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருப்பார் என்று நீங்கள் கருதுவீர்கள். அதற்குள் அவர் இந்திய அணியின் ஒரு நட்சத்திரமாக திகழ்கிறார். ஆனால் உண்மையில் அவர் 40 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ரோஹித், விராட் கோலி போன்ற இந்திய அணி மற்றும் முன்னணி வீரர்களை போல் அவர் அதிகம் விளையாடவில்லை”

இதையும் படிங்க: ஆஸியில் இந்தியாவுக்கு இது மட்டும் நடந்தா.. கிரேக் சேப்பல் மாதிரி கம்பீர் ஓடிருவாரு.. சைமன் டௌல் பேட்டி

“பட் கமின்ஸ் போல பும்ரா பந்து வீச்சில் தன்னுடைய அணியை வழி நடத்துவார். பெர்த் மைதானத்தில் கடைசியாக விளையாடிய போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை எடுத்தும் இந்தியா தோற்றது. ஆனால் இம்முறை அணியை வழி நடத்தப்போகும் அவர் அனுபவத்தால் பல எதிரணி வீரர்களின் பலவீனத்தை தன்னுடைய திறமையால் அம்பலப்படுத்துவார்” என்று கூறினார்.

- Advertisement -