ஆஸியில் இந்தியாவுக்கு இது மட்டும் நடந்தா.. கிரேக் சேப்பல் மாதிரி கம்பீர் ஓடிருவாரு.. சைமன் டௌல் பேட்டி

Simon Doull
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடருக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். நவம்பர் 22ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வென்று இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் விளையாட உள்ளது.

ஏனெனில் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 என்ற கணக்கில் இந்தியா சொந்த மண்ணில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. முன்னதாக இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவருடைய தலைமையில் இலங்கையில் டி20 தொடரில் அட்டகாசமான வெற்றி பெற்ற இந்தியா ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து தோற்றது.

- Advertisement -

வாயை விட்ட கம்பீர்:

பின்னர் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் வென்று இந்தியா அசத்தியது. ஆனால் அடுத்ததாக நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் முதல் முறையாக சொந்த மண்ணில் இந்தியா முழுமையான ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அந்த சூழ்நிலையில் கடந்த 5 வருடங்களில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 சதங்கள் மட்டுமே அடித்துள்ளது கவலையை கொடுப்பதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார்.

அது பற்றி கேட்டதற்கு இந்திய அணியை பேசுவதற்கு ரிக்கி பாண்டிங் யார்? என்று கௌதம் கம்பீர் அதிரடியான பதிலை கொடுத்தார். அது ஆஸ்திரேலியர்களுக்கு மத்தியில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இம்முறை இந்தியா தோல்வியை சந்தித்தால் கிரேக் சேப்பல் அளவுக்கு கூட அல்லாமல் முன்கூட்டியே கௌதம் கம்பீர் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கிரேக் சேப்பல் போல:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது கிரேக் சேப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்ததை விட குறைவான காலமாக இருக்கலாம். நாம் அனைவரும் கம்பீருடன் சேர்ந்து விளையாடுவோம் அல்லது அவருடன் உட்கார்ந்து வர்ணனை செய்வோம். அவர் முரட்டுத்தனமான கேரக்டர் என்பது நமக்கு தெரியும். அவர் இவ்வாறு பேசுவது தான் இந்திய அணிக்கு தற்போது தேவையா?”

இதையும் படிங்க: இந்தமுறை விராட் கோலியை சாதிக்க விடமாட்டோம்.. அதுல உறுதியா இருக்கோம் – மிட்சல் மார்ஷ் அதிரடி

“தடுமாறும் வீரர்களுடன் கம்பீர் அமர்ந்து எப்படி விளையாடுவது என்பதைப் பற்றி பேசி அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வரலாறு உண்டு. ஆனால் இது ஒரு கடினமான கேள்வி. பெரிய தொடர் வரும் போது நீங்கள் ஊடகங்களுடன் நட்பாக இருக்கப் போவதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவேளை ஆஸ்திரேலியாவில் 4 – 1 அல்லது 5 – 0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தால் அவர் இந்த வேலையில் தொடர்வாரா என்பது எனக்கு தெரியாது” என்று கூறினார்.

Advertisement