இந்தமுறை விராட் கோலியை சாதிக்க விடமாட்டோம்.. அதுல உறுதியா இருக்கோம் – மிட்சல் மார்ஷ் அதிரடி

Marsh
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் மட்டுமே இடம் பிடித்து விளையாடி வருகிறார். ஒருநாள் போட்டியில் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் அவரது பார்ம் தற்போது சரிவினை சந்தித்துள்ளது. கடைசியாக அவர் விளையாடிய சில தொடர்களில் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அவர் மீது சில விமர்சனங்களும் இருந்து வருகின்றன.

விராட் கோலியை மட்டும் விட மாட்டோம் :

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் மூன்று போட்டிகளிலும் 6 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளதால் இந்த எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சென்றுள்ள இந்திய அணி தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வரும் வேளையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய பத்திரிகைகள் நாள்தோறும் சில செய்திகளை வெளியிட்டு அவரை கொண்டாடி வருகின்றனர். இப்படி ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய வீரர் ஒருவர் குறித்து தொடர்ச்சியாக செய்தி வெளியாகி வருவது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் விராட் கோலி குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான மிட்சல் மார்ஷ் கூறுகையில் : கால்பந்து வீரரான ஹார்லி ரீட் ஆஸ்திரேலியா பத்திரிகைகளில் எவ்வாறு இடம் பெறுவாரோ அந்த அளவிற்கு எங்களது ஆஸ்திரேலியா பத்திரிகைகள் விராட் கோலியை கொண்டாடி வருகின்றனர். இப்படி ஆஸ்திரேலிய செய்தித்தாள்களில் அவரின் செய்திகளை தொடர்ச்சியாக பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது.

- Advertisement -

இதுவரை விளையாடிய கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி மிகச் சிறந்தவர் என்பதனாலே இது போன்ற செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. அவர் ஒரு திறமையான பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமே இல்லை. அவரை நாங்கள் மிகவும் மதிக்கிறோம் ஆனால் இந்த தொடரில் அவரை ரன்கள் எடுக்க விடுக்கம் விடமாட்டோம் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : ரிஷப் பண்டிற்கு பதிலாக அந்த விக்கெட் கீப்பரை 15-20 கோடி கொடுத்து டெல்லி வாங்கும் – சுனில் கவாஸ்கர் கணிப்பு

இந்த தொடர் முழுவதுமே அவருக்கு எதிராக ஆதிக்கத்தை செலுத்தி அவரை ரன்களை குவிக்க விடாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எங்களது இலக்கு. விராட் கோலிக்கு தனிப்பட்ட முறையில் நாங்கள் மரியாதை அளித்தாலும் எங்களுக்கு எதிராக அவர் ஒரு பேட்ஸ்மேனாக இருக்கும் போது அவரை நாங்கள் ரன்குவிக்க விடமாட்டோம் என மிட்சல் மார்ஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement