அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது எதிர்வரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக ஏற்கனவே இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டது.
டெல்லி அணி நிச்சயம் அவரை வாங்கும் :
அதனை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் ஏலம் நடைபெற இருப்பதினால் இந்த மெகா ஏலத்தில் எந்தெந்த அணி, எந்தெந்த வீரர்களை வாங்கும்? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. ஒரு சில அணிகள் கேப்டனையே வெளியேற்றி உள்ளதால் அந்த அணிகளின் தேர்வு எவ்வாறு அமையும்? என்பது குறித்தும் அனைவரது பார்வையும் திரும்பி உள்ளது.
அந்தவகையில் கடந்த சில ஆண்டுகளாகவே டெல்லி அணியை வழிநடத்தி வந்த ரிஷப் பண்ட் அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் அவருக்கு பதிலாக ஒரு வீரரை வாங்க வேண்டிய அவசியம் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக டெல்லி அணி ரிஷப் பண்ட்டை தவிர்த்து இஷான் கிஷனை 15 முதல் 20 கோடி வரை கொடுத்து வாங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதைய டெல்லி அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அவசியம் தேவை.
அதிலும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் போட்டியை தனியாக நின்று மாற்றக்கூடிய திறமை உள்ள ஒரு வீரரை அந்த அணி வாங்கும். அந்த வகையில் மும்பை அணியில் இடம் பெற்று விளையாடி வந்த இஷான் கிஷனை 15 முதல் 20 கோடி குடுத்து வாங்க முயற்சிக்கும் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : அவர்மட்டும் இருந்திருந்தா எங்களை டயர்டு ஆக்கியே சாவடிச்சிருப்பாரு.. நல்லவேளை தப்பிச்சிட்டோம் – ஜோஷ் ஹேசல்வுட்
இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 14 ஆட்டங்களில் விளையாடிய அவர் 320 ரன்களை அடித்து சுமாரான பங்களிப்பை வழங்கியதால் மும்பை அணி அவரை தக்க வைக்கவில்லை ஆனாலும் அவரை ஆர்.டி.எம் கார்டு கொடுத்து மீண்டும் அணிக்குள் கொண்டு வர முயற்சிக்கலாம் என்று தெரிகிறது. ஒருவேளை அப்படி நடக்கவில்லை என்றால் நிச்சயம் அவர் பெரிய தொகைக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.



