இந்தியாவில் ஜெயிக்க பஸ்பால் போதாது.. அதுல குருவா இருக்கணும்.. இங்கிலாந்தின் திணறல் பற்றி மேத்தியூ ஹைடன்

Matthew Hayden
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் யுக்தியை கடைபிடிக்கும் இங்கிலாந்து நிறைய வெற்றிகளை பெற்றுள்ளது. எனவே அதே அணுகுமுறையை பயன்படுத்தி இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து எச்சரித்தது. அதற்கேற்றார் போல் முதல் போட்டியில் வென்ற அந்த அணி ஆரம்பத்திலேயே முன்னிலையும் பெற்றது.

ஆனால் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்ற இந்தியா தக்க பதிலடி கொடுத்து எங்களை சொந்த மண்ணில் அவ்வளவு சுலபமாக வீழ்த்த முடியாது என்பதை காண்பித்துள்ளது. மறுபுறம் எப்போதுமே அதிரடியாக விளையாடுவோம் என்று ஒற்றைக்காலில் நிற்கும் இங்கிலாந்து சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் செயல்படாமல் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்துள்ளது.

- Advertisement -

குருவா இருக்கணும்:
குறிப்பாக மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற அந்த அணி 21ஆம் நூற்றாண்டில் தங்களுடைய மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. இந்நிலையில் இந்தியாவில் வெல்வதற்கு பஸ்பால் எனப்படும் அதிரடியான அணுகுமுறையை பின்பற்றினால் மட்டும் போதாது அங்குள்ள ரசிகர்களை சமாளிக்க குருவை போல் வலுவான மனநிலையுடன் வேண்டும் என இங்கிலாந்துக்கு மேத்தியூ ஹைடன் அறிவுரை கூறியுள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தொடர் அனைத்து வழியிலும் இந்தியாவின் பக்கம் சென்றுள்ளதாக நான் கருதுகிறேன். இன்று காலை இத்தொடரின் முடிவைப் பற்றி நான் பார்த்தேன். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிக்கு இது சவாலாக இருக்கிறது என்று நினைத்தேன். அது எனர்ஜி மற்றும் உங்களிடம் இருக்கும் குறைவான திறமையை வைத்து போரிடுவதாகும்”

- Advertisement -

“ஏனெனில் இந்த விளையாட்டில் இந்தியாவில் இருக்கும் பார்வையாளர்கள் அனைவரும் தொடர்ந்து உங்களுக்கு எதிராக வருவார்கள். இந்தியாவில் எப்போதுமே குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராக வெல்வதில் ரசிகர்களின் மகத்தான எனர்ஜி இருக்கும். நீங்கள் ஆஸ்திரேலியாவையும் அந்த பட்டியலில் இடலாம். எனவே அங்கே வெல்வதற்கு நீங்கள் மனதளவில் அமைதியுடன் குருவாக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: பும்ராவை தொடர்ந்து மேலும் ஒரு வீரருக்கு ஓய்வினை வழங்க திட்டம். யார் அந்த வீரர் – விவரம் இதோ

“இந்த தொடரில் இங்கிலாந்து விளையாடுவதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள். சில நேரங்களில் இந்தியாவைப் பின்னுக்கு தள்ளி முன்னிலையில் வந்தாலும் அவர்களால் அதை தக்க வைக்க முடியவில்லை” என்று கூறினார் இதைத் தொடர்ந்து இந்த தொடரின் நான்காவது போட்டி வரும் பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சி நகரில் துவங்க துவங்க உள்ளது. அதிலும் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் விளையாடி வெற்றி காணும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement