“இந்தமுறையும் கப் நம்மகிட்ட தான் இருக்கனும்” உருக்கமான பதிவை பகிர்ந்து – சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேறிய பதிரானா

Pathirana
- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 11 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே சென்னை அணிக்கு எஞ்சியுள்ள வேளையில் பிளே ஆப் சுற்றுக்கான ரேசில் சென்னை அணி இருந்து வருகிறது.

இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட கிட்டத்தட்ட சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். இந்நிலையில் இந்த தொடரில் இருந்து இலங்கை அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா விலகுவதாக அறிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவையும் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சென்னை அணியின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்துவரும் பதிரானா கடந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை கைப்பற்றுவதற்கு உறுதுணையாக இருந்தார். அதேபோன்று இந்த ஆண்டும் அவர் சென்னை அணிக்கு பக்கபலமாக இருப்பார் என்று பார்க்கப்பட்டது.

ஆனால் காயம் காரணமாக இடையிலேயே ஒரு சில போட்டிகளை தவறவிட்ட அவர் 6 போட்டிகளில் மட்டும் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்நிலையில் தற்போது பிளே ஆப் சுற்று போட்டிகள் நெருங்கி வரும் வேளையில் காயம் காரணமாக அவர் விலகுவதாக அறிவித்து வெளியிட்டுள்ள ஒரு பதிவில் :

- Advertisement -

கடினமான சூழலில் சென்னை அணியில் இருந்து விடைபெறுகிறேன். 2024 ஐபிஎல் தொடரின் கோப்பையை சென்னை அணியின் ஓய்வறையில் விரைவில் பார்ப்பேன் என்று நம்புகிறேன். சிஎஸ்கே அணியின் ஆசியும் ரசிகர்கள் கொடுத்த அன்பும் அளப்பரியது. இந்த அணிக்காக விளையாடுவதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பையில் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ் பந்துவீசுவாரா? – பயிற்சியாளர் கொடுத்த விளக்கம்

மேலும் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக அவர் பூரணமாக குணமடைய வேண்டி இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டதாலும் அவர் தற்போது சென்னை அணியில் இருந்து வெளியேறி நாடு திரும்பி தனது காயத்திற்கான சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். இந்த தொடரில் எஞ்சியுள்ள மூன்று லீக் போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என்கிற இக்கட்டான நிலையில் பதிரானா அந்த அணியில் இருந்து விலகியது ஒரு மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement