- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல்நாள் பெய்த மழையால் அடுத்த 4 நாட்களில் ஏற்படவுள்ள மாற்றம்.. 2 முக்கிய மாற்றங்களின் – விவரம் இதோ

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது டிசம்பர் 14-ஆம் தேதி இன்று பிரிஸ்பேன் நகரில் துவங்கியது. இந்த போட்டியின் ஆரம்பத்தில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் இந்திய அணி பந்துவீசும் என்று அறிவித்து இந்திய அணியில் உள்ள இரண்டு மாற்றங்களையும் தெரிவித்திருந்தார்.

மூன்றாவது போட்டியில் ஏற்பட்டுள்ள மாற்றம் :

அதன்பிறகு போட்டி ஆரம்பித்து ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாட ஆரம்பித்ததும் போட்டியின் ஐந்தாவது ஓவரின் போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக சுமார் 20 நிமிடங்கள் வரை போட்டி தடைபட்டு மீண்டும் ஆரம்பித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து 13.2 வது ஓவரின் போது ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் கனமழை பெய்தது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் அப்போதே உணவு இடைவேளையை எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு பல மணி நேரங்கள் ஆகியும் மழை நிற்காததால் மைதானத்தில் நீர் தேங்க துவங்கியது.

இதனால் இந்த போட்டியின் முதல்நாள் ஆட்டம் முழுவதுமாக நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்த வேளையில் ரசிகர்களும் மைதானத்திலிருந்து வெளியேற ஆரம்பித்தனர். மழைபெய்து பலமணி நேரம் கடந்தும் நிற்காததால் முதல்நாள் ஆட்டம் மீண்டும் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இப்படி முதல்நாளில் வெறும் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ள வேளையில் அதனை ஈடு செய்யும் விதமாக போட்டியின் அடுத்த நான்கு நாட்கள் எப்படி நடைபெறும்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அடுத்த நான்கு நாட்களும் 98 ஓவர்கள் ஒரு நாளைக்கு வீசப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வழக்கமாக 5:50 மணிக்கு துவங்க இருக்கும் போட்டி இனி 5:20 மணிக்கு துவங்கும் என்று இரண்டு மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சேன்ஸ் குடுக்கலானா கூட பரவாயில்ல.. இப்படி பண்ணாதீங்க.. சர்பராஸ் கானுக்காக – வருந்தும் ரசிகர்கள்

இதன் காரணமாக முதல் நாளில் ஏற்பட்ட ஓவர் இழப்பினை மீதமுள்ள நான்கு நாட்களில் தவிர்க்கலாம் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த போட்டி மழையால் டிராவானால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு சிக்கலாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -