இந்திய அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சர்பராஸ் கான் இந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது அறிமுக வீரராக களமிறங்கி மூன்று போட்டிகளில் விளையாடி 5 இன்னிங்ஸ்களில் 200 ரன்கள் அடித்து அசத்தினார். அந்த தொடரில் மூன்று அரை சதங்களை விளாசிய அவரது சராசரி 50 ரன்களாக இருந்தது. பின்னர் தொடர்ச்சியாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து வந்த அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக :
சர்பராஸ் கானுக்கு நிகழ்ந்த அவமானம் :
அண்மையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் ஒரு சதம் அடித்தாலும் மற்ற ஐந்து இன்னிங்ஸ்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து 6 இன்னிங்ஸ்களில் 171 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் அவர் ஓரளவு திருப்திகரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
இப்படி இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டியில் விளையாடி ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்கள் என 371 ரன்கள் அடித்துள்ள அவருக்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய மண்ணிலேயே 6 போட்டிகளை மட்டும் விளையாடிய அவருக்கு வெளிநாடுகளில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை.
அதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இந்திய டெஸ்ட் அணியின் எதிர்கால நட்சத்திர வீரராக பார்க்கப்படும் அவருக்கு இது போன்ற வெளிநாட்டு தொடர்களில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற ஆதரவு ரசிகர்கள் மத்தியில் அவருக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. அவருக்கு “பால் பாய்” வேலையை மட்டும் தராதீர்கள் என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கங்களை முன்வைத்து வருகின்றனர். ஏனெனில் அண்மையில் வெளியான வீடியோ ஒன்றில் இந்திய அணி பிரிஸ்பேன் நகரில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது அந்த வலைப்பயிற்சியின் திடலுக்கு பின்னால் அமர்ந்து கொண்டு அந்த பந்துகளை எடுத்து வீசும் வீரராக சப்ராஸ்கான் இருந்த காட்சியை வெளியானது.
இதையும் படிங்க : தெய்வமே நீங்க இங்கயும் வந்துட்டீங்களா? சாராவின் வருகையால் சுப்மன் கில்லை – கிண்டலடிக்கும் ரசிகர்கள்
இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர் ஒருவருக்கு வலைப்பயிற்சியில் கூட வாய்ப்பு கொடுக்காமல் பந்து பொறுக்கி வீசவைப்பது தவறு என்றும் ரசிகர்கள் அவரை நினைத்து வருதத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



