தெய்வமே நீங்க இங்கயும் வந்துட்டீங்களா? சாராவின் வருகையால் சுப்மன் கில்லை – கிண்டலடிக்கும் ரசிகர்கள்

Sara-and-Gill
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது டிசம்பர் 14-ஆம் தேதியான இன்று பிரஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் இந்தி வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்புடன் விளையாடி வருகிறது.

பிரிஸ்பேன் வந்துள்ள சாரா டெண்டுல்கர் :

அதேபோன்று ஆஸ்திரேலிய அணியும் தங்களது வெற்றியை தொடரும் முனைப்புடன் விளையாடுவதால் இந்தப் போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் இந்த போட்டியை நேரில் காண்பதற்காக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் நேரில் வருகை தந்துள்ளார்.

- Advertisement -

இன்றைய முதல்நாள் ஆட்டத்தின் போது டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து இன்றைய முதல்நாள் ஆட்டத்தில் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை காரணமாக முதல்நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டு முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த போட்டி ஆரம்பித்த சில மணி நேரங்களில் சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர் இந்த போட்டியை நேரில் காண வந்துள்ளதை கேமராக்கள் படம் பிடித்து காட்டியது. சாரா டெண்டுல்கரின் பின்னால் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ஜாஹீர்கான் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரும் இருந்தனர். இப்படி சாரா டெண்டுல்கர் இந்திய அணி விளையாடும் போட்டியை நேரில் காண ஆஸ்திரேலியா வரை சென்றுள்ளது சுப்மன் கில்லுக்காக தான் என்று ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே சாரா டெண்டுல்கரும், சுப்மன் கில்லும் காதலித்து வருகிறார்கள் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்த வேளையில் தொடர்ச்சியாக அவர்கள் இருவரையும் சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். சுப்மன் கில் விளையாடும் பல போட்டிகளை சாரா டெண்டுல்கர் மைதானத்திற்கு சென்று பார்த்த நிகழ்வுகளும் நடந்தது உண்டு.

இதையும் படிங்க : சொத்தை வீணடிக்காதீங்க.. அது முடியாது.. நானா பும்ராவா இருந்தா ரிட்டையராகி இதை செய்வேன்.. அக்தர் அட்வைஸ்

இவ்வேளையில் இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வேளையில் இந்த போட்டியை நேரில் காண ஆஸ்திரேலியா வரை சாரா டெண்டுல்கர் சென்றுள்ளது சுப்மன் கில்லுக்காக தான் என ரசிகர்கள் இந்த விடயத்தினை கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement