இந்தியாவில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் சூரத் நகரில் அக்டோபர் இரண்டாம் தேதி இரவு 7 மணிக்கு 12 வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா மற்றும் சௌதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.
அதில் டாஸ் வென்ற சௌதர்ன் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஒடிசா அணி 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 192-9 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு துவக்க வீரர் ரிச்சர்ட் லெவி 9 பவுண்டரி 4 சிக்சருடன் 63 (21) ரன்கள் விளாசி நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் மிடில் ஆர்டரில் ஜெசி ரைடர் 18, கெவின் ஓ’பிரைன் 9, ராஸ் டெய்லர் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
மார்ட்டின் கப்டில் அதிரடி:
லோயர் ஆர்டரில் யூசுப் பத்தான் 33, கேப்டன் இர்பான் பத்தான் 10, வினய் குமார் 18* ரன்கள் எடுத்தனர். ஒடிசா அணிக்கு அதிகபட்சமாக சுபோத் பாட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 193 ரன்களை துரத்திய ஒடிசா அணிக்கு கேப்டன் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி 18 ரன்களில் அவுட்டானார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் மார்ட்டின் கப்டில் அதிரடியாக விளையாடினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி துவக்க வீரராக விளையாடிய அவர் நீண்ட நாட்கள் கழித்து இப்போட்டியில் தம்முடைய பழைய ஸ்டைலில் எதிரணி பவுலர்களை வெளுத்து வாங்கினார். குறிப்பாக நவீன ஸ்டீவார்ட் வீசிய 6வது ஓவரின் முதல் 3 பந்துகளில் அவர் 6, 6, 6 என அடுத்தடுத்த ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்டார். அத்தோடு நிற்காத அவர் கடைசி 3 பந்துகளில் 4, 6, 6 என மீண்டும் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களையும் விளாசி ஒரே ஓவரில் 34 ரன்கள் அடித்தார்.
உடைந்த கண்ணாடி:
அப்போதும் நிற்காத அவர் டேன் கிறிஸ்டின் வீசிய 9வது ஓவரின் ஒரு பந்தை நேராக பெரிய சிக்ஸராக பறக்க விட்டார். அது அங்கே உட்கார்ந்து வர்ணித்துக் கொண்டிருந்த வர்ணனையாளர்கள் அறையின் கண்ணாடியை உடைத்தது. அந்த வகையில் 38 வயதில் பட்டாசான ஆட்டத்தை வெளிப்படுத்திய கப்டில் 9 பவுண்டரி 11 சிக்ஸருடன் 131* (54) ரன்களை 242.59 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி மாஸ் ஃபினிஷிங் கொடுத்தார்.
இதையும் படிங்க: தோனி விஷயத்துல அத பத்தி நான் பேசுனா தப்பாயிடும்.. எனக்கு சரியா தோணல – ஹர்பஜன் சிங் கருத்து
இறுதியில் ஹமில்டன் மசகட்சா 20 ரன்களில் அவுட்டானாலும் பவன் நெகி 14* (11) ரன்கள் எடுத்த உதவியுடன் 16 ஓவரிலேயே ஒடிசா 195-2 ரன்கள் எடுத்தது. அதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஒடிசா அணி அதிரடியான வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய மார்ட்டின் கப்டில் ஆட்டநாயகன் என்பதை வென்றார்.