அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக பிசிசிஐ இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக என்னென்ன விதிமுறைகளை வெளியிடப்போகிறது என்று அனைவரும் காத்திருந்த வேளையில் அண்மையில் பிசிசிஐ வெளியிட்டிருந்த அறிவிப்பில் :
இந்த விதிமுறை தோனிக்கு செட்டாகாது :
ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை தக்க வைக்கலாம் என்றும் மெகா ஏலத்தின் போது 120 கோடிகளை செலவு செய்யலாம் என்றும் அன் கேப்டு பிளேயர் விதிமுறை மீண்டும் கொண்டு வந்துள்ளதாகவும் அறிவித்து இருந்தது. இப்படி இந்த அன் கேப்டு விதிமுறையை சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனி விளையாடவே கொண்டுவரப்பட்டதாக பலரும் பேசி வருகின்றனர்.
ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிய வீரர் அண் கேப்டு பிளேயர் வரிசையில் வருவார்கள் என்பதனால் தோனிக்காகவே இம்முறை அந்த விதிமுறை பி.சி.சி.ஐ கொண்டு வந்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். ஒருபுறம் தோனி மீண்டும் விளையாடுவதற்கு இந்த விதி உதவியாக இருந்தாலும் மறுபுறம் அதிகளவு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த விதிமுறையின் மூலம் தோனியை 4 கோடி ரூபாய்க்கு தக்க வைக்க முடியும் என்பதாலும் இந்த விதி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான ஹர்பஜன் சிங் கூறுகையில் : மகேந்திர சிங் தோனி முடிவில்லாத ஒரு பிளேயர். அவர் கடந்த பல ஆண்டு காலமாக கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த அவர் இந்திய அணிக்காக இரண்டு உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த வீரர். ஆனால் இப்போது நீங்கள் அவரை அன் கேப்டு வீரர் என்ற படியலில் சேர்க்க அனுமதித்திருக்கிறீர்கள். இதைப்பற்றி நான் இப்பொழுது என்ன சொன்னாலும் அது சர்ச்சையாக மாறிவிடும். ஆனால் இந்த விதி அவருக்கு சரியானது அல்ல என்று எனக்கு தோன்றுகிறது.
இதையும் படிங்க : இந்தியாவிடம் தோத்துட்டா.. உடனே பாகிஸ்தான் இதை செஞ்சதா மக்கள் சந்தேகப்பட்டாங்க.. முடாசர் நாசர் ஆதங்கம்
அதே சமயத்தில் இந்த விதி தோனிக்கு மட்டுமே பொருந்தாது என்று நினைக்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் கால்தடம் பதியாத வீரர்கள் அல்லது வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்களை அன் கேப்டு பிளேயர் என்று சொல்லலாம். ஆனால் தோனியை போன்ற ஒரு வீரரை எப்படி இந்த பட்டியில் சேர்ப்பது என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.



