ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய மற்றொரு நட்சத்திர வெளிநாட்டு வீரர் – சிக்கலில் அணி (எந்த அணி?)

Wood
- Advertisement -

இந்தியாவில் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் கோலாகலமாக துவங்க இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு வரை 8 அணிகளுடன் விளையாடப்பட்டு வந்த இந்த ஐபிஎல் தொடரானது இந்த ஆண்டு புதிதாக இணைந்துள்ள குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகளுடன் சேர்த்து 10 அணிகளுடன் விளையாட இருக்கிறது. இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட அணிகள் அனைத்தும் 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளதால் இரண்டு மாதத்திற்கு ரசிகர்களுக்கு எந்த ஒரு குறையுமின்றி மிகப்பெரிய பொழுதுபோக்கு காத்திருக்கிறது.

IPL 2022

- Advertisement -

ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொண்டு விளையாட இருப்பதால் இந்த ஐபிஎல் தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இத்தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அடுத்தடுத்து நட்சத்திர வீரர்கள் பலர் காயம் காரணமாக விளங்கி வருவது ஒவ்வொரு அணிக்கும் பெரிய பின்னடைவை தந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்த ஆண்டு புதிதாக விளையாடவுள்ள கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணிக்கு ஒரு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த அணியில் இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் ஏழரை கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.

wood 1

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வரும் இவர் லக்னோ அணியின் பிளேயிங் லெவனிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருக்கும் அவர் முதலாவது டெஸ்ட் போட்டியின் போது வலது கையில் காயமடைந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து அவர் காயத்திற்கான பரிசோதனை எடுத்துக் கொண்டபோது அவருக்கு இந்த காயம் பெரியதாக உள்ளதால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இந்த பதினைந்தாவது ஐபிஎல் சீசனில் இருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தோனியை அடுத்து அவரின் விக்கெட்டை எடுப்பதே லட்சியம் – ஐபிஎல் தொடருக்காக கனவுடன் காத்திருக்கும் சக்காரியா

ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் வேளையில் இப்படி பல நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து இத் தொடரில் விளையாட முடியாத சூழ்நிலையில் வெளியேறி வருவதால் அனைத்து அணிகளும் சற்று சிரமப்பட்டே வருகிறது என்று கூறலாம். லக்னோ அணியின் கேப்டனாக கே.எல் ராகுலும் ஆலோசகராக கம்பீரும் இந்த தொடரில் செயல்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement