வீடியோ : அடுத்தடுத்த 147 கி.மீ மிரட்டல் வேகத்தில் டெல்லியை தெறிக்க விட்ட மார்க் வுட் – லக்னோ அதிரடியாக வென்றது எப்படி

Mark Wood
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 2023 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 1ஆம் தேதியன்று நடைபெற்ற 2 போட்டிகளில் இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற 3வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயட்ண்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய லக்னோவுக்கு கேப்டன் கேஎல் ராகுல் தடுமாற்றமாக செயல்பட்டு 8 (12) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் சரவெடியாக பவுண்டரிகளை பறக்க விட்ட கெய்ல் மேயர்ஸ் உடன் பெயருக்காக 2வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தீபக் ஹூடாவும் 17 (18) ரன்களில் நடையை கட்டினார்.

ஆனால் அடுத்த சில ஓவர்களில் தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் சரமாரியாக வெளுத்து வாங்கிய கெய்ல் மேயர்ஸ் 2 பவுண்டரி 7 சிக்ஸருடன் அதிரடியாக 73 (38) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த நிக்கோலஸ் பூரன் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 3 சிக்சருடன் 36 (21) ரன்களும் ஆயுஷ் படோனி 18 (7) ரன்களும் க்ருனால் பாண்டியா 15* (13) ரன்களும் எடுக்க கடைசி பந்தில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய கிருஷ்ணப்பா கௌதம் சிக்ஸருடன் சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

மிரட்டல் வேகம்:
அதனால் 20 ஓவர்களில் லக்னோ 193/6 ரன்கள் குவித்த நிலையில் டெல்லி சார்பில் அதிகபட்சமாக கலீல் அகமது மற்றும் சேட்டன் சக்கரியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதை தொடர்ந்து 194 என்ற கடினமான இலக்கை துரத்திய டெல்லிக்கு பவர் பிளே ஓவர்களில் டேவிட் வார்னர் – பிரிதிவி ஷா ஆகியோர் 41 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியான தொடக்கம் கொடுத்தனர். ஆனால் 5வது ஓவரை வீசிய மார்க் வுட் 3வது பந்தில் 3 பவுண்டரியுடன் 12 (9) ரன்கள் எடுத்திருந்த பிரித்வி ஷா’வை 147.3 கி.மீ வேகத்தில் கிளீன் போல்டாக்கினார்.

அத்துடன் அடுத்து வந்த மிட்சேல் மார்ஷை 147.8 கி.மீ வேகப்பந்தில் கிளீன் போல்டாக்கி கோல்டன் டக் அவுட் செய்து பெவிலியன் திருப்பி வைத்த அவர் அடுத்த ஓவரிலேயே சர்ப்ராஸ் கானையும் 4 ரன்களில் காலி செய்து பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தினார் என்றே சொல்லலாம். ஏனெனில் அந்த அடுத்தடுத்த விக்கெட்டுகளால் 86/4 என டெல்லி தடுமாறியதால் அதிரடியாக விளையாடிய கேப்டன் டேவிட் வார்னர் மெதுவாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அந்த நிலையில் எதிர்புறம் வந்த ரிலீ ரோசவ் 30 (20) ரன்களை அதிரடியாக எடுத்தாலும் ரோவ்மன் போவல் 1 (3) ரன்களும் இம்பேக்ட் வீரராக வந்த அமன் கான் 4 ரன்களிலும் அவுட்டாகி சென்றனர்.

- Advertisement -

அந்த நிலையில் கடைசி வரை செட்டிலாகியும் அதிரடியை துவக்காத டேவிட் வார்னர் 7 பவுண்டரியுடன் 56 (48) ரன்களில் ஆட்டமிழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அக்சர் படேல் 16 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் 143/9 ரன்களுக்கு டெல்லியை கட்டுப்படுத்திய லக்னோ 50 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்று இந்த சீசனை வெற்றியுடன் துவக்கியுள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அதிரடியான வேகத்தில் பந்து வீசி 5 விக்கெட்டுகளை சாய்த்த மார்க் வுட் சந்தேகமின்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க: வீடியோ : அடுத்தடுத்த 147 கி.மீ மிரட்டல் வேகத்தில் டெல்லியை தெறிக்க விட்ட மார்க் வுட் – லக்னோ அதிரடியாக வென்றது எப்படி

லக்னோ அணி தன்னுடைய சொந்த மைதானத்தில் ஆரம்பத்திலேயே பெரிய ரன்களை குவித்தது பாதி வெற்றியை உறுதி செய்த நிலையில் மார்க் வுட் தன்னுடைய அதிரடியான வேகத்தால் எஞ்சிய வெற்றியை உறுதி செய்தார். மறுபுறம் ரிசப் பண்ட் இல்லாத நிலைமையில் பந்து வீச்சில் சுமாராகவே செயல்பட்ட டெல்லிக்கு கேப்டனாக டேவிட் வார்னர் பொறுப்புடன் செயல்பட்டாலும் இதர பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் பரிதாபமான தோல்வியை சந்தித்தது.

Advertisement