அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று தெரிவித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்தது. பின்னர் 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 19.2 அவர்களின் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாமல் போனதே காரணமாக அமைந்தது. குறிப்பாக துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரி மற்றும் ஒன்பது சிக்ஸர்கள் என 92 ரன்கள் அடித்து அசத்தினார்.

ஆனால் அவருக்கு ஈடாக எந்த ஒரு பேட்ஸ்மேனும் பெரிய ரன்கள் குவிக்காததால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் எட்டாவது வீரராக களம் இறங்கிய கேப்டன் தோனி 7 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 14 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதனை தொடர்ந்து இந்த போட்டியில் ஒரு சிக்சரை விளாசியதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்காக மாபெரும் சாதனை ஒன்றினை தோனி நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் தோனி படைத்த சாதனை யாதெனில் : நேற்று தோனி அடித்த அந்த ஒரு சிக்சர் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக 200 சிக்சர்களை அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையைப் படைத்தார்.
இதையும் படிங்க : PBKS vs KKR : அசத்திய பஞ்சாப், கொல்கத்தாவின் வெற்றியை பறித்த மழை – மின்விளக்கு? ரசிகர்கள் அதிருப்தி – நடந்தது என்ன
இதற்கு முன்னதாக கிரிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி ஆகியோர் பெங்களூர் அணிக்காக 200 சிக்சர்களுக்கு மேல் விளாசியுள்ளனர். மும்பை அணிக்காக பொல்லார்டு 200 சிக்சர்களை விளாசியுள்ளார். அதனைதொடர்ந்து சென்னை அணிக்காக தற்போது தோனி 200 சிக்சர்களை விளாசி இந்த பட்டியலில் ஐந்தாம் இடம் பிடித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



